தனிமைப் படுத்தப்பட்ட435 விடுதலை செய்த இராணுவம்

Spread the love

தனிமைப் படுத்தப்பட்ட435 விடுதலை செய்த இராணுவம்

மாலைதீவில் இருந்து 350 பேர் நாளை 14 ஆம் திகதி இலங்கைக்கு சொந்தமான விமானத்தினூடாக இலங்கை வரவுள்ளனர்.

அவர்கள் அனைவரும் இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்

என கொவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் பூனானை (127), பம்பைமடு(129), தம்மின்ன(69), பல்லேகல (12) மற்றும் பூசா(98)

ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 435 பேர் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர்

தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் 13 ஆம் திகதி தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதுவரை, 11 ஆம் திகதியுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 8099 நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

தற்பொழுது நாடுபூராகவுள்ள முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் 40 தனிமைப்படுத்தல் மையங்களில் 3444 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

அதனடிப்படையில் இன்று 13 ஆம் திகதியுடன் கொவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 439 ஆகும். அவர்களில் குணமடைந்த 61 பேர் பேர் பிசிஆர்

பரிசோதனையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். தொற்றுக்குள்ளான 378 கடற்படை வீரர்கள் தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் நபர்கள் -8099

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள நபர்கள் -3444

தனிமைப்படுத்தல் நிலையங்கள்- 40

தனிமைப் படுத்தப்பட்ட435 விடுதலை செய்த இராணுவம்
தனிமைப் படுத்தப்பட்ட435 விடுதலை செய்த இராணுவம்

Leave a Reply