சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
Spread the love

சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

சுற்றிவளைப்புக்கு சென்ற அஹங்கம பொலிஸ் அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காயம் அடைந்ததுடன், கல்வீச்சு காரணமாக ஜீப் வண்டியின் பின்பக்க கண்ணாடியும் சேதமடைந்துள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் சட்டவிரோத மதுபானங்களை சுற்றிவளைப்பதற்காக வெதகேவத்தை, தித்தகல்ல, பகுதிக்கு சென்றிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

375 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்ட நபரை ஜீப் வண்டியில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வர முற்பட்ட போது, சந்தேகநபரை மீட்பதற்காக பொலிஸ் அதிகாரிகளை சுற்றிவளைத்து 8 பேர் கொண்ட குழுவொன்று பொல்லுகள் மற்றும் கற்கலினால் தாக்குதல் நடத்தியுள்ளது.

சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

பொலிஸ் விசாரணையில் பொலிஸ் உப பரிசோதகரை பொல்லினால் தாக்கிய நபர், சம்பவத்தின் பின்னர் கடற்றொழிலுக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் கொனகஹஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பில் குறித்த சந்தேகநபருக்கு மேலதிகமாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.