சீன எரிபொருள் மானியத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை

50 புதிய எரிபொருள் நிலையங்கள்
Spread the love

சீன எரிபொருள் மானியத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை

ஒரு ஹெக்டெயருக்கு குறைவான நிலத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் ஒவ்வொரு விவசாயிக்கும், சீனாவினால் வழங்கப்படும் எரிபொருள் மானியத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு கிடைத்த 10.06 மில்லியன்

லீற்றர் எரிபொருள் மானியத்தில் இருந்து 6.98 மில்லியன் லீற்றர் எரிபொருளை இலங்கையின் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிவாரணமாக

சீன எரிபொருள் மானியத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை

வழங்க தீர்மானித்துள்ளதாக விவசாயம், வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறு கிடைக்கப்பெற்ற எரிபொருள் மானியத்தின் மிகுதியை, நாட்டின் மீன்பிடித்துறைக்கு வழங்கப்பட உள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான


எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் இந்த எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்..

No posts found.