சாதாரண தரம் உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடர வாய்ப்புகள்

பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி
Spread the love

சாதாரண தரம் உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடர வாய்ப்புகள்

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் பேரில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் சித்தியடையாத

மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெஹியோவிற்ற படங்கல இளைஞர் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமான LIGHTING DIGITAL தகவல் தொழிநுட்ப பயிற்சி முகாமின் மாணவர்களுடனான

சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்….

சாதாரண தரம் , உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடர வாய்ப்புகள்

2023ஆம் ஆண்டு இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்கும். இதற்காக இளைஞர், யுவதிகளை இந்தத் துறையில் இணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தகவல் தொழிநுட்பத் துறையைச் சேர்ந்த பலர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். எனவே அந்த இடைவெளியை நிரப்புவது அவசியமானது. க.பொ.த சாதாரண தர அல்லது உயர்தரத்தில் தேர்ச்சியடையாத மாணவர்களை இத்துறைக்குள் உள்வாங்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதியின் இலக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் முழுமையான அறிவைக் கொண்ட நிபுணர்களை உருவாக்குவதன் ஊடாகவே இதனை வெற்றி கொள்ள முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், சாதாரண தரம் அல்லது உயர் தரம் என்பது வெறும் சான்றிதழ் மட்டுமே. ஆனால் அந்தத் தேர்வில் தேர்ச்சியடையாத பெரும்பாலான மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். நீங்கள் இந்தப் பரீட்சைகளில் தேர்ச்சியடையவில்லை என்றால், வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்க வேண்டிய அவசியமில்லை.

இன்று சர்வதேச மட்டத்தில் மென்பொருள் அமைப்புகளை உருவாக்குவதில் இலங்கை மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 50,000 பேர் சுதந்திரமாகத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

2021 ஆம் ஆண்டில்,Free lance களாக பணிபுரியும் நபர்கள் நாட்டிற்கு 140 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளனர். அடுத்த வருடத்திற்குள் இதேபோன்ற இன்னுமொரு குழுவை உருவாக்குவது தொழில்நுட்ப அமைச்சின் மற்றுமொரு இலக்காகும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்ந நிகழ்வுக்கு கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதத் மஞ்சுள உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No posts found.