21ம் திருத்தம் மனோ கணேசன் அறிவிப்பு

Spread the love

21ம் திருத்தம் மனோ கணேசன் அறிவிப்பு

21ம் திருத்தம் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல்குழு 8ம் திகதி தீர்மானிக்கும் என மனோ கணேசன் அறிவிப்பு

8ம் திகதி கொழும்பு நுகேகொடை செயலகத்தில் கூடவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டத்தில் 21ம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.  

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, ஜனாதிபதி வகிக்க கூடிய அமைச்சுக்கள், பிரதமரை நீக்குவதற்கான ஜனாதிபதியின் அதிகாரம், அமைச்சர்களை

நியமிப்பதற்கான பிரதமரின் அதிகாரம், இரட்டை குடியுரிமை, சுயாதீன குழுக்கள், நீதிமன்ற சுயாதீனம் உட்பட்ட விவகாரங்களை ஆராயும் அதேவேளை இவற்றை விட

இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் பக்க விளைவாக விகிதாசார தேர்தல் முறைமைக்கும், 13ம் திருத்தம் மூலமான  மாகாணசபை முறைமைக்கும்

உடனடியாகவோ, காலம் கழித்தோ வரக்கூடிய ஆபத்துகள் தொடர்பிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி விசேட அவதானத்தை கொண்டுள்ளதாக மனோ கணேசன் எம்பி மேலும் தெரிவித்துள்ளார்.  

இலங்கையை ஆண்டுகளாக ஆண்டு வந்த ஆட்சியாளர்களினால் 21 சட்ட திருத்த மூலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ண கருத்தை கொண்டிருக்கவில்லை

இன்றைய அரசியல் நிலைகள் காரணமாக இதனை உடன் அமுலுக்கு கொண்டு வந்தது அதில் மாற்றங்களை ஏற்படுத்தி ஜனாதிபதி நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிக்க வேண்டும் என கருதுகின்றனர்

இவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அதனால் பாதிக்க பட்டுள்ள சிறுபான்மை தமிழாக்களுக்கு உரிய தீர்வு கிட்டுமா என்பதே மக்கள் கருத்தாக உள்ளது

காலம் காலமாக ஏமாற்ற பட்டு உதாசீனம் செய்ய பட்டு வந்த சிறுபான்மை தமிழர்களுக்கு சிங்கள பவுத்த பேரினவாத அரசு உரிய தீர்வினை வழங்கி நாட்டையும் ,மக்களிடத்திலும் நல்லெண்ணத்தை விதிக்குமா என்பது சந்தேகமே

மைத்திரி சிறிசேன ஆட்சியில் நல்லாட்சி கூட்டு தத்துவம் என கூறப்பட்ட பொழுதும் முடிந்தவரை தனது ஆட்சியை தக்கவைத்து கொள்ள மைத்திரி சிறிசேன முயன்றார் தவிர இலங்கையில் நிரந்தர அமைதியும் சமாதானமும் ஏற்படுத்த வேண்டும் என அவர் விரும்பவிலை

இவ்வாறான கசப்புணர்வுளுடன் கரைந்து செல்லும் இலங்கையில் நிரந்தர சமாதானம் எழுந்திட இந்த அரசியல் சட்ட அமைப்பு மாற்றங்கள் வழிகோலுமா என்பதே கேள்வியாக உள்ளது .

    Leave a Reply