சிரியா இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் ஊடுருவி தாக்குதல்

சிரியா இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் ஊடுருவி தாக்குதல்
Spread the love

சிரியா இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் ஊடுருவி தாக்குதல்

சிரியாவின் துறைமுக நகரமான டார்டஸின் புறநகர்ப் பகுதிகள் ,
குண்டு சத்தங்களினால் அதிர்ந்த வண்ணம் உள்ளன .

டார்டஸ் நகரின்வான் பகுதியில் சிரிய வான் பாதுகாப்பு படையினரால்,
சியோனிச ஏவுகணைகளை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக
சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது.

சிரிய வான்வெளிக்குள் ஆழ உள் நுழைந்து ,
டார்டஸ் மாகாணத்தில் உள்ள “அல்-ஜமாசி” இராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டது .

இந்த இராணுவ முகாமில் ஈரான் தயரிப்பு ஆயுதங்கள் மறைத்து வைக்க பட்டிருந்தன ,
அவ்வகையான ஏவுகணைகள் கூடம் அழிக்க பட்டுள்ளதாக ,இஸ்ரேல் தெரிவிக்கிறது .

எனினும் இஸ்ரேல் இராணுவம் ஏவிய ஏவுகணைகளில் ,
கணிசமானவை சுட்டு வீழ்த்த பட்டதால் ,இழப்புக்கள்
தடுக்க பட்டுள்ளது என்கிறது சிரியா இராணுவம் .

சிரியா இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் ஊடுருவி தாக்குதல்

இஸ்ரேல் நடந்தும் வலிந்து தாக்குதல்களுக்கு எதிராக ஐக்கிய,
நாடுகள் சபையில் ,முறைப்பாடு செய்ய பட்ட பொழுதும் ,
இஸ்ரேல் மீது எவ்வித நடவடிக்கையும் ,எடுக்கப்படவில்லை என,
சிரியா கவலை வெளியிட்டுள்ளது .

ஐக்கிய நாடுகள் சபை என்பது வல்லாதிக்க வல்லூறுகளின்,
பொம்மை என மக்கள் பேசி வருகின்றனர் .

இஸ்ரேல் நடத்தும் அத்துமீறல் ஆக்கிரமிப்புக்கு தாக்குதலை தடுத்து ,
நிறுத்துவது யார் என்பதே கேள்வியாக உள்ளது