சிசிடிவி ஊடாக விதிமீறல்களைக் கண்டறியும் திட்டம் ஆரம்பம்

சிசிடிவி ஊடாக விதிமீறல்களைக் கண்டறியும் திட்டம் ஆரம்பம்
Spread the love

சிசிடிவி ஊடாக விதிமீறல்களைக் கண்டறியும் திட்டம் ஆரம்பம்

கொழும்பில் உள்ள சிசிடிவி அமைப்பின் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸார் விசேட சிசிடிவி வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் கொழும்பில் உள்ள CCTV பிரிவில், போக்குவரத்து விதிமீறலை CCTV அமைப்பின் மூலம் அடையாளம் காணும் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர்.

கொழும்பு நகருக்குள் முக்கிய இடங்கள் மற்றும் மேம்பாலங்களை உள்ளடக்கியதாக சுமார் 108 சிசிடிவி கேமராக்கள் உள்ளன.

இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டாலும், சாரதிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும்.

அத்துடன், பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி ஊடாக விதிமீறல்களைக் கண்டறியும் திட்டம் ஆரம்பம்

சிசிடிவி போக்குவரத்து விதிமீறல்களை அடையாளம் காணும் முறைமையின் ஊடாக, போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களால், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு திறமையான சேவையை வழங்க முடியும் என தென்னகோன் கூறியுள்ளார்.

போக்குவரத்துப் பிரிவின் சிசிடிவி அமைப்பினால் குற்றங்கள் தொடர்பான வீடியோ ஆதாரம் அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

வீடியோ