கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தம் சபாநாயகர்

கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தம் சபாநாயகர்
Spread the love

கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தம் சபாநாயகர்

மறு அறிவித்தல் வரை கோப் குழு கூடாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில், வௌ்ளிக்கிழமை (17) அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று (17) பிற்பகல் ஒரு மணிக்கு கோப் குழுவின் அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், வௌ்ளிக்கிழமை ஜூம்மா இருப்பதால்

மரிக்கார் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொள்ள முடியாது. ஆகையால் இந்த விடயத்தில் தலையிடுமாறு சபாநாயகரை பிரேமதாஸ கேட்டுக் கொண்டார்.

பின்னர் தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, மறு அறிவித்தல் வரை கோப் குழு குழு கூட்டங்கள் இடைநிறுத்தப்படும் என தெரிவித்தார்.

கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தம் சபாநாயகர்

அங்கு எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, மத வழிபாடுகள் நிறைவடைந்த பிறகு அந்த கோப் குழுக்கூட்டத்தை நடத்தியிருக்கவேண்டும். ஏன்? மறு அறிவித்தல் வரை ஏன் நிறுத்தப்பட்டது எனக் கேட்டார்.

கோப் குழுவில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகளை தவிர்த்து. உரிய கூட்டங்கள் நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வீடியோ