கொழும்பில் அதிக கொரனோ நோயாளிகள்

Spread the love

இலங்கையில் 2,859 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் பெரும்பான்மையானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கொவிட் -19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இவர்களின் எண்ணிக்கை 608 ஆகும்.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திலிருந்து 547 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 447 பேரும், காலி மாவட்டத்திலிருந்து 143 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 136 பேரும், கண்டி

மாவட்டத்திலிருந்து 108 பேரும், குருநாகல் மாவட்டத்திலிருந்து 99 பேரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 82 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 76 பேரும், இரத்தினபுரி

மாவட்டத்திலிருந்து 78 பேரும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 57 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 56 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 50 பேரும், அம்பாறை மாவட்டத்திலிருந்து 46 பேரும் நேற்றையதினம் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், பதுளை மாவட்டத்திலிருந்து 43 பேரும், மொனராகலை மாவட்டத்திலிருந்து 40 பேரும், புத்தளம் மாவட்டத்திலிருந்து 42 பேரும், அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 39 பேரும், முல்லைத்தீவு

மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இருந்து தலா 31 பேர் வீதமும், பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 29 பேரும், நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவர்.

அத்துடன், வவுனியா மாவட்டத்திலிருந்து 22 பேரும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 17 பேரும், மாத்தளை மாவட்டத்திலிருந்து 14 பேரும், மன்னார் மாவட்டத்திலிருந்து 8 பேரும் நேற்றையதினம் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 10 பேரும் நேற்றையதினம் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave a Reply