கொலையான பிஞ்சு – வலியான நெஞ்சு

Spread the love

கொலையான பிஞ்சு – வலியான நெஞ்சு

பர பரப்பு பேச்சு
விறு விறுப்பா போச்சு
பார்க்கும் இடமெல்லாம்
சிறுமி கொலை பேச்சு

பெற்றவளே கொன்றாளாம்
பெரும் துயரை தந்தாளாம்
இத்துயரை தந்திட தான்
இவ்வுலகில் பிறந்தாளாம்

பத்து மாதம் சுமந்தவளே
பாதகத்தை செய்தாளாம்
கத்தி தனை எடுத்து
குற்றறையில துடித்தாளாம்

பெற்றவனை குளிக்க விட்டு
பெரும் கொலையை செய்தாளாம்
கத்தி தங்கை அழுகையிலே
கதறி ஓடி வந்தானாம்

நித்திரையாய் தங்கையவள்
நிலை குலைந்து கிடைக்கையில
கத்தி கத்தி அழுதானம்
களைத்து அவன் விழுந்தானாம்

பெற்றவளும் உற்றவளும்
பெரும் வலியில் துடிக்கையில
வீடெல்லாம் குருதியில
வெள்ளமாக ஓடையில

எப்படித்தான் துடித்திருப்பன்
என்ன தான் நினைத்திருப்பான் ..?
அப்பப்பா அவன் வலியை
யாரிடம் தான் சொல்லிருப்பான் …?

தனிமையில சில நிமிடம்
தம்பியவன் நிலையிழந்தான்
ஓடி வந்த காவல்துறை
ஒத்தியவன் அணைத்திருப்பான்

பொத்தி பொத்தி வளர்த்தவளை
பொன்மகளாய் இரசித்தவளை
குற்றிட தான் முனைந்ததென்ன -உயிர்
குடித்திட தான் துடித்ததென்ன …?

கட்டி அம்மா முத்தமிட்டு
கதைகள் பல சொல்லி நன்று
நம்பி நாளும் நின்றவளை
நரபலி எடுத்ததென்ன …?

அகவை ஐந்து ஆக முன்னே
ஆவியை தான் தின்றவளே
நீ இருந்து என் காண்பாய்
நினைவுடனே தினம் சாவாய்

பொல்லாத மான நோயால்
பொலி விழந்து போனவளே
இந்த நாளில் கொலையாகி
இதயம் இல்லா போனாயே

உன் மனதை மகிழ்வூட்ட
உன்னாலே முடியலையோ …?
உன் அருகில் நண்பர்கள்
உயிராகி கூடலையோ …?

அழகான உறவுகளை
அடியேன் யான் கண்ணுற்றேன்
அவர் காணும் ஓடி வந்து
ஆறுதல் கூறலையோ …?

பொல்லாத நினைவுகளை
பொறுக்கி வந்தது தந்தது யார் …?
கல்லாகி மனம் போக
கனி மரத்தை வைத்தது யார் …?

லண்டன் மா நகரிலே
லட்சங்கள் அழுகிறது
நாள் தோறும் சாயகியால்
நலிந்துடல் மாய்கிறது

பெற்றவளே கொன்றாளாம்
பெரும் துயரை தந்தாளாம்
இத்துயரை தந்தவளை
இவ்வுலகு இழிந்தாராம்

வன்னி மைந்த னிவன்
வலிகளை கொட்டி விட்டேன்
வாங்கி வந்த செய்திகளை
வாரியாக்கி வைத்து விட்டேன்

ஆவி துறந்தவளே
அஞ்சலிகள் உனக்கம்மா
ஆறா துயரோடு
விடை பெற்றேன் நான் அம்மா ….

02-07-2020

Home » Welcome to ethiri .com » கொலையான பிஞ்சு – வலியான நெஞ்சு

Leave a Reply