கல்முனை – காரைதீவு கடற்கரை வீதி காபட் வீதியாகும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Spread the love

கல்முனை – காரைதீவு கடற்கரை வீதி காபட் வீதியாகும் வேலைத்திட்டம் ஆரம்பம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

நாட்டின் ஒரு லட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில்

கல்முனை தொடக்கம் காரைதீவு வரையான 3.4 கிலோமீற்றர் கடற்கரை வீதி காபட் வீதியாக புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கான வேலைத்திட்டங்கள் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை வீதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டன

. இதனை (08) கடந்த வியாழக்கிழமை காலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தொகுதி செயற்பாட்டாளரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளருமான றிஸ்லி முஸ்தபா ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், என்.எஸ் என்ஜினீரிங் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் றிஸ்லி முஸ்தபாவின் இணைப்பாளருமான எம்.யூ.எம்.நியாஸ்,


றிஸ்லி முஸ்தபாவின் செயளாலர் ஜவாஹீர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் மற்றும் கல்முனை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை - காரைதீவு கடற்கரை
கல்முனை – காரைதீவு கடற்கரை

    Leave a Reply