கண்ணீர் விட்ட சந்திரிக்கா

Spread the love

மரமொன்றை அடியோடு வெட்டினாலும் அதன் வேர்கள் பரவியிருந்தால், அம்மரம் மீண்டும் முளைக்குமெனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,

அதற்குச் சில காலமெடுக்கும்; அதுவரையிலும் நான், உயிருடன் இருப்பேனா, இல்லையா என்பது தொடர்பில் தெரியாது. ஆனால், இளைஞர்களை ஒன்றிணைத்து, மரத்துக்கு உயிர்கொடுப்பேன்” என்றார்.

அதிக ஆண்டுகள் ஆட்சியிலிருந்து ஒரே கட்சி; நாட்டுக்காகப் பல நல்ல விடயங்களைச் செய்த கட்சியே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

எனத் தெரிவித்த அவர், அவ்வாறானதொரு கட்சியின் தலைவிதியை எண்ணி, மனவருத்தம் அடைகின்றேன் என்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவு ​நேற்றாகும் (02). அதனையொட்டி, தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் இன்றைய நிலையை எண்ணும்போது, படுக்கையில் இருந்து காலையில் எழும்புவதற்கே தோன்றவில்லை. இதற்குச் சில வேளைகளில் நானும் பொறுப்புக்கூற

வேண்டியவளாகின்றேன். காரணம், நான் செய்ததுக்காக அல்ல; செய்யாமல் விட்ட விடயங்களுக்காகவே பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

எனது தந்தை, கட்சியை உருவாக்கினார். தாய், அதற்கான சட்டங்​களை உருவாக்கி கட்சியைப் பலப்படுத்தினார். அதனை நான், முன்னோக்கிக் கொண்டு சென்று பலப்படுத்தினேன். 2007ஆம் ஆண்டிலிருந்து கட்சியுடன் இணைந்து, அரசியலை

முன்னெடுக்குமாறு அழைப்புகள் பல வந்தன. அப்போது, பல கனவுகளுடன் நாட்டின் நிலையைக் கருத்தில்கொண்டு 2015ஆம் ஆண்டு மீண்டும் அரசியலுக்கு வந்தேன். இதற்கமைய பெரிய

கூட்டணியை உருவாக்குவோமெனத் தீர்மானித்து, கூட்டணியையும் உருவாக்கி, பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். நல்லாட்சியின் 100 நாள் வேலைத்திட்டமும் இதில்

உள்ளடங்குவதாகத் தெரிவித்த அவர், நாட்டுக்காகக் கட்சி முன்னெடுத்த அனைத்தும், எம்மால் அதிகாரத்துக்கு கொண்டுவரப்பட்ட தனியொருவரால் அழிக்கப்பட்டன என்றார்.

தனக்குப் பின்னால் வந்த இரண்டு தலைவர்களும் கட்சியின் அழிவுக்குப் பொறுப்பு கூற​வேண்டும். ஒருவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அழித்து, அவருக்குத் தேவையான இலங்கையில்

பிரபலமான கெசினோக்காரர்கள், போதைப் பொருள் வர்த்தகர்கள் இருவர், பெரிய சூதாட்டக்காரர்கள், கசிப்புக் காரர்களைக் கொண்டு வந்தார்; அவர்களை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தார்.

அவர்களுக்குப் பெரிய பதவிகளையும் வழங்கி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றால் இதுதான் என்ற பிம்பத்தைக் காண்பித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, கட்சியின் செயற்பாடுகளை நிறுத்தமாறு தன்னிடமே தெரிவித்ததுடன், தன்னையும்

கட்சியிலிருந்து தூரமாக்கினர் என்றார். ஆனால், இந்தக் கட்சியை முழுமையாக அழிக்க முடியாது என்றார்.

தூர நோக்கு, பலம்மிக்க சிந்தனை, சிரேஷ்ட உறுப்பினர்களின் இரத்தத்தால் வளர்க்கப்பட்ட வரலாற்றைக் கொண்ட இக்கட்சியை அழிக்க முடியாது.


மரமொன்றை அடியோடு வெட்டினாலும், மரத்தின் வேர் பரவியிருந்தால் அது முளைக்கும்; ஆனால், அதிக நாள்கள் எடுக்கும். அதுபோலவே, எமது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியெனும் இந்த மரமும்

முளைக்கும். அப்போது, நான் உயிருடன் இருப்பேனோ தெரியாது. ஆனால், இந்த மரத்துக்குப் பலம் சேர்ப்பதற்குத் தேவையான இளைஞர் சமூகத்தை உருவாக்க ஒத்துழைபேன் என்றார்

Leave a Reply