கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் -சென்றவர்களை கரை திரும்ப வேண்டுதல்

Spread the love

கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் -சென்றவர்களை கரை திரும்ப வேண்டுதல்

வங்காள விரிகுடாவின் வடமேற்குப் பகுதியில் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் பயணங்களில் ஈடுபட வேண்டாமென வளிமணடலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் பயணங்களில் ஈடுபட வேண்டாமென வளிமணடலவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

தற்போது கடல் பிரதேசத்தில் கடற்றொழில் ஈடுபட்டிருப்பவர்கள் விரைவாக கரைக்குத் திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்குத் செல்லுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம் நாளை மறுதினம் புயலாக மாற்றமடையக்கூடுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா

கடல் பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். காற்று 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

    Leave a Reply