கடமை தவறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Spread the love

கடமை தவறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கும் ஆலோசனைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நேற்று (04) கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நுவரெலியாவை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துவதற்கு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

கடமை தவறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தற்போது வரை முன்னெடுக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் எதிர்கால அபிவிருத்திக்கான திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மாவட்ட வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாட்டைக் குறைத்தல், பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல்,

வீதி புனரமைப்பு, குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடித் தீர்மானங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது