கச்சத்தீவு யாருக்கு சொந்தமானது பட்டிமன்ற தலைவரான டக்கிளஸ்

கச்சத்தீவு யாருக்கு சொந்தமானது பட்டிமன்ற தலைவரான டக்கிளஸ்
Spread the love

கச்சத்தீவு யாருக்கு சொந்தமானது பட்டிமன்ற தலைவரான டக்கிளஸ்

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமா அல்லது இந்தியாவிற்கு சொந்தமா என்று பார்த்தால் இரண்டு தரப்புகளும் வெவ்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (04) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தரப்பு கூறுகின்றது கச்சத்தீவு தங்களுக்கு சொந்தம் என்று அதேபோல் இந்தியா தரப்பில் கூறப்படுகின்றது தங்களுக்கு சொந்தம் என்று எது எவ்வாறு இருந்தாலும் இந்தியாவில் இப்போது தேர்தல் ஒன்று நடைபெறுகின்றது தேர்தல் காலங்களில் இவ்வாறான கோஷங்கள் தான் வந்துக்கொண்டு இருக்கிறது.

1974ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பாக இலங்கை அரசும் இந்தியா அரசும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் படி இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கையிலும் இலங்கை கடற்தொழிலாளர்கள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று தொழில் செய்யலாம் என்று இருக்கிறது என தெரிவித்தார்.