ஓமந்தை சோதனை சாவடியில் இராணுவத்தினருடன் இணைந்து ஈபிடிபி: காரணம் வெளியானது photo

Spread the love

ஓமந்தை சோதனை சாவடியில் இராணுவத்தினருடன் இணைந்து ஈபிடிபி: காரணம் வெளியானது photo

இராணுவ சோதனை சாவடி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு

அமைவாக இன்று அவரது குழுவினர் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடிக்கு சென்று இராணுவத்தினருடன் கலந்துரையாடியிருந்தனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஈபிடிபி கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர்

கு.திலீபன், கட்சியின் ஓமந்தை பிரதேச அமைப்பாளர் ச.வாகீசன் உள்ளடங்கலான குழுவொன்று ஓமந்தை சோதனைச் சாவடிக்கு விஜயம் செய்திருந்தது.

இதன்போது கட்வசியின் மாவட்ட நிர்வாக செயலாளர் தெரிவிக்கையில், இராணுவத்துடன் உரையாடிய போது நாங்கள் பேரூந்தை நிறுத்தி பொதிகளை சோதனை

செய்கிறோம். பல தடவை போதை பொருட்கள் பிடிபடுகின்றது. அதனை கொண்டு வருபவர்களையும் பொலிசாரின் உதவியோடு கண்டு பிடிக்கிறோம்.

பெண்கள் கொண்டுவரும் பொதிகளை பெண் இராணுவத்தினரே சோதனை செய்கின்றனர். பொலிசாரும் உடன் இருக்கின்றனர். வேகமாக சோதனை செய்துவிட்டு

பேரூந்திலே ஏற்றி விடுகிறோம். பேரூந்தை தூர நிறுத்துவது கூட இல்லை. நீங்களே பார்வையிடுங்கள். போதை பொருள் பயன்பாட்டையும், கடத்தலையும் தடுப்பதற்கே

இந்நடவடிக்கை. இது நீண்ட காலத்திற்கு இல்லை என இராணுவத்த்pனர் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

அப்போது நான், பயணிகளுக்கு இடையூறுகள் இல்லாமலும், இறங்கியேற சிரமப்படும் பயணிகளை இறக்க வேண்டாமென்றும், பேரூந்தை நிறுத்துமிடத்திலேயே

பொதிகள் சோதனை முடிந்தவுடன் ஏற்றவேண்டுமென்றும் அங்குள்ள இராணுவத்தினரிடம் கேட்டுக்கொண்டேன். அத்துடன் போதைப்பொருள் விடயத்தை கட்டுப்பாட்டுக்குள்

கொண்டு வருவதோடு, அமைச்சரின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்று விரைவில்

சோதனைச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக இதன்போது தெரிவித்தார்.

ஓமந்தை சோதனை சாவடியில்
ஓமந்தை சோதனை சாவடியில்
ஓமந்தை சோதனை சாவடியில்
ஓமந்தை சோதனை சாவடியில்

Leave a Reply