என்னை மறந்தவளுக்கு இறுதி மடல் …!

Spread the love

என்னை மறந்தவளுக்கு இறுதி மடல் …!

அகமெல்லாம் கோடையது
அக்கனியாய் கொதிக்கிறது
விழியேனோ மார்கழியாய்
விழுந்தேனோ நனைகிறது

நெஞ்சேனோ நித்தம் – உன்
நினைவால் துடிக்கிறது
கத்தும் கடல் அலை போல
கரை தேடி அலைகிறது

பகல் எல்லாம் தேடுகிறேன்
பாலை வனம் ஆகிறது
இறுதி போர் முற்றுகையாய்
இதயம் ஏன் இருக்கிறது …?

நான் இட்ட முத்தத்தை
நகல் எடுத்து இன்று வை
நான் இறந்த பின்னாலே
நாளும் நீ ருசித்து வை

ஒன்றாக இருக்கையிலே
ஓராயிரம் சண்டைகள்
ஒருமையில வாடையில
உனை வாட்டும் தனிமைகள்

காரணங்கள் ஏதுமின்றி
கல் எறிந்தாய் நெஞ்சமதில்
விட்டெறிந்து நீ போனாய்
விழுந்து விட்டேன் நோயதினில்

பிணம் எடுக்கும் வேளையில
பிரண்டழுவாய் நீ மட்டும்
பின்னே வந்த மாதங்களில்
என்னை மறப்பாய் நீ முற்றும்

மறத்தல் தான் வாழ்வினிலே
மனதிற்கு நின்மதி
மரண ஓட்டம் தான்
மனிதனின் தலை விதி

எதை எடுப் பாய் எதை எறிவாய்
எண்ணிப் பாய் நீ தான்
என் மனதில் உள்ளவற்றை
எழுதிவிட்டேன் மன்னிப்பாய் ..!

வன்னி மைந்தன்
ஆக்கம் -03-08-2020

Home » Welcome to ethiri .com » என்னை மறந்தவளுக்கு இறுதி மடல் …!

Leave a Reply