இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு

இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு
Spread the love

இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு

இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தீ கொழுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் உள்ளே நுழைந்து ,இஸ்ரேல் இராணுவம் மற்றும் மக்களை சிறை பிடித்து சென்றனர் .

இருநூறு நாட்கள் கழிந்த நிலையில் இதுவரை கைதிகளை விடுவிக்க ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை .

இதனை அடுத்து தற்போது மக்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் .

இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு மக்கள் எதிர்ப்பு

ஹமாஸ் போர் படைகளினால் சிறை பிடித்த கைதிகளை விடுவிக்க கோரி ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வீடு முன்பாக மக்கள்தீ கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

காசா மீதான போரை நிறுத்தி உடனடியாக கைதிகளை விடுவித்து தரும் படி கோரிக்கை விடுத்துள்ளனர் .

சட்டம் ஒழுங்கை உரிய முறையில் கடைபிடிக்காத நிலையில் ,தமது மக்களும் இராணுவம் ஹமாஸ் படைகளினால் சிறை பிடித்து செல்ல பட்டனர் என்ற விடயத்தை முன் வைத்து தமது எதிர்ப்பை காண்பித்து வருகின்றனர் .

நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் மக்கள்

உடனடியாக தேர்தலை நடத்துங்கள் ,நெதன்யாகுவின் ஆட்சியை கவிழ்த்து விடுகிறோம் என மக்கள் கோபத்தோடு பேசி வருகின்றனர் .

தேர்தலை நடத்தினால் ,தோற்று விடுவோம் என அச்சம் நெதன்யாகுவிற்கு ,அதனால் இணங்க மறுத்து போரை நீடித்து நடத்தி வருகின்றார் .