இளம் வயதில் கிழக்கு மாகாண பணிப்பாளராக பதவியேற்ற (திருமதி) சரண்யா சுதர்சன்

இளம் வயதில் கிழக்கு மாகாண பணிப்பாளராக பதவியேற்ற (திருமதி) சரண்யா சுதர்சன்
Spread the love

இளம் வயதில் கிழக்கு மாகாண பணிப்பாளராக பதவியேற்ற (திருமதி) சரண்யா சுதர்சன் பற்றிய சிறு பார்வை

பைஷல் இஸ்மாயில் –

திருகோணமலை மாவட்ட – தம்பலகமம் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட கணபதிப்பிள்ளை அரியநாயகம் மற்றும் பத்மலோஜினி அரியநாயகம் ஆகியோருக்கு 02 வது பிள்ளையாகப் பிறந்த அரியநாயகம்

சரண்யா, திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் ஆரம்பக்கல்வி தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்ற இவர், உயர்தரப்

பரீட்சையில் மாவட்டத்தில் 16வது நிலையைப் பெற்ற மாணவியாகத் தெரிவாகி இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவானார்.

இளம் வயதில் கிழக்கு மாகாண பணிப்பாளராக பதவியேற்ற (திருமதி) சரண்யா சுதர்சன்

தனது 4 வருட பல்கலைக்கழக காலப்பகுதியில் பல சவால்களை எதிர்கொண்டு வியாபார நிருவாகமாணிப் பட்டம் மற்றும் சந்தைப்படுத்தல் சிறப்பு பட்டங்களைப் பெற்று முதல்நிலை மாணவியாகத் திகழ்ந்த இவருக்கு,

சிறந்த மாணருக்கான விருது மற்றும் அனைத்து வருடங்களின் மிகச் சிறந்த மாணவர் விருதினையும் தனதாக்கிக் கொண்ட பெருமையும் இவருக்குண்டு.

அவரது கல்விப் பருவத்தில் கற்றல் செயற்பாடுகளில் மட்டும் நின்றுவிடாமல் விளையாட்டு நிகழ்ச்சிகள், கலை கலாசார நிகழ்ச்சிகள், தொழிநுட்ப அறிவுப்

போட்டிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்குபற்றி அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம்பெற்ற ஒரு முன்னணி மாணவியாகவும் திகழ்ந்துள்ளார்.

இலங்கை நிருவாக சேவை அல்லது கணக்காளர் சேவையில் தனது மகள் உள்நுழையவேண்டுமென, தனது தந்தையின் கனவாக இருந்தது.

அவரின் கனவே தனது கனவாக நினைத்துக்கொண்டு அந்த இலக்கை முன்வைத்து அவரது இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்தார். அந்த இலக்கையும் அடைந்தார்.

இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் பதவியில் பயிலுநராக இருந்தபோது, பட்டபின் படிப்பு பொது நிருவாகப் பரீட்சையில் மிகச் சிறந்த

தேர்ச்சி சித்தி பெற்றதனால், அவருக்கு தங்க விருது கிடைக்கப்பெற்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.

அதற்கமைவாக, அரியநாயகம் சரண்யா 2014 ஆம் ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தராக அரச சேவைக்குள் உள்வாங்கப்பட்ட இவர், அதேயாண்டில் முகாமைத்துவ பயிலுனராக இலங்கை வங்கியில் கடமையாற்றி வந்தார்.

2015 ஆம் ஆண்டு இலங்கை அவிருத்தி நிருவாக நிறுவனத்தில் இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் பயிலுனராக இணைக்கப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் உதவி

ஆணையாளராக நியமிக்கப்பட்டு, 7 வருடங்கள் கடமையாற்றி வந்த இந்நிலைமையில், 2022 ஆம் ஆண்டு சிறிது காலப்பகுதியில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பதில் உதவிப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

அவர் கடமையாற்றிய காலப்பகுதியில் திணைக்களத்தில் நிலவுகின்ற குறைபாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ததுடன், அதன் முன்னேற்றப்

பாதைக்கு வழிவகுத்து பல்வேறுபட்ட அபிவிருத்தி சார்ந்த விடயங்களுக்கு பாரிய பங்களிப்பைச் செய்துவந்தார்.

இந்நிலைமையிலேயே, கிழக்கு மாகாண கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் பொறியியலாளர்
இராஜயோகம் சுதர்ஸன் என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து 1

ஆண் மற்றும் 1 பெண் பிள்ளைக்கு தாயாகவும்,
சிறந்த குடும்பத் தலைவியாகவும் இருந்து வருகிறார்.

    Leave a Reply