மலையக பல்கலைகழக மாணவர்களுக்கான இலவச மடிக்கணணி

Spread the love

மலையக பல்கலைகழக மாணவர்களுக்கான இலவச மடிக்கணணி

“கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிபொருளில் புஸ்ஸல்லாவ குளோபல் நிறுவனத்தினால் 20.02.2022 ஆரம்பிக்கப்பட்ட செயற்திட்டதின் ஊடாக மலையகத்தில் இருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு மடிக்கணணி வழங்குதலில்

முதல் கணணியினை புஸ்ஸல்லாவ சரஸ்வதி தேசிய கல்லூரியில் 2017 கலை பிரிவில் கல்வி பயின்று கிழக்கு பல்கலைகழகத்தில் “கல்வியியல் சிறப்பு கற்கைநெறிக்கு” தெரிவாகி கல்வி பயிலும் பட்டப்பயில் மாணவி பெருந்தோட்ட தொழிலாழியின்

பி;ள்ளை விஜயன் கௌசல்யா அவர்களுக்கு அதன் ஏற்பாட்டாளர் ஊடகவியளாளர் பா.திருஞானம் அவர்களினால் இன்று (27) வழங்கி வைக்கபட்டுள்ளது.

இந்த செயற்திட்டத்திற்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் உப செயலாளர் பி.சிறிகாந் அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு செட்டியார் தெருவை சேர்ந்த வர்த்தகர்

எஸ்.சுரேஷ் அவர்கள் ஒரு கணணியையும் பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் ஒருவர் ஒரு கணணியையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள்.

இந்த இரு கணணிகளில் ஒரு கணணி மேற்படி மாணவிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மற்றயது புஸ்ஸல்லாவை இலக்கம் 460/8/1 அமைந்துள்ள குளோபல் நிறுவனத்தில் பல்கலைகழக மாணவர்கள் பாவிக்க கூடிய வகையில் பிரின்டர் உட்பட இன்டர்நெட்

வசதியடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனை பல்கலைகழக மாணவர்கள் இலவசமாக நேரில் வந்து விடுமுறை காலங்களில் பாவிக்கலாம்.

மேலும் இந்த செயற்திட்டத்தில் இணைந்து மலையக பல்கலைகழக மாணவர்களுக்கு மடிக்கணணிகளை வழங்கி உதவ கூடியவர்கள் எம்முடன் இணையுமாறு கேட்டுக் கொள்ளபடுவதோடு. மடிக்கணிகள் தேவையான மலையகத்தை சேர்ந்த பல்கலைகழக

பெருந்தோட்ட பட்டப்பயில் மாணவர்கள் “குளோபல்” இல 460/8/1 நுவரெலியா வீதி புஸ்ஸல்லாவ என்ற விலாசத்திற்கு எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன்

கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். எமக்கு கணணிகள் கிடைப்பதற்கு ஏற்பவும் மாணவர்களின் பாட அவசியப்பாட்டுக்கு அமைய வழங்கப்படும்.

குறிப்பாக மலையத்தில் இருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ள பட்டப்பயில் மாணவர்களில் பலர் பொருளாதா சிக்கல்கள் காரணமாக பலர் தங்கள் கல்வியினை இடை நிருத்தி வருகின்றனர். மலையகத்தின் சனத்தொகைக்கு ஏற்ப 1750 மாணவர்கள்

பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்பட வேண்டும். இருந்தும் தற்போது சுமார் 450 மாணவர்களே தெரிவு செய்யப்படுகின்றார்கள். இவர்களிலும் பொருளாதார பிரச்சனை காரணமாக யாரும் இடை விலகள் ஏற்பட கூடாது என்பதற்காக இந்த “கல்விக்கு கரம் கொடுப்போம்” செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    Leave a Reply