இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்

இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்
Spread the love

இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்

இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம் ,இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் உறைவு .

இன்று இலங்கையில் இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பணி புரியும் மருத்துவர்கள் இலங்கையை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் .

இலங்கையில் வைத்தியர்கள் தப்பி ஓட காரணம் என்ன ..?

இலங்கையில் இலங்கை வைத்தியர்கள் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடுவதற்கு அவர்களுக்கு வழங்க படும் சம்பள பணத்தில் அதிக வரி மற்றும் ,சம்பளம் போதாமை உள்ளமை காரணத்தினால் நாட்டை விட்டு தப்பி ஓடி வருகின்றனர் .

இந்த வைத்தியர்களுக்கு உரிய சம்பளத்தை இலங்கைஆளும் அரசுகள் ,அதன் சுகாதார மைச்சு வழங்குமாக இருந்தால் ,ஏன் அவர்கள் தமது தாய் நாட்டை விட்டு ஓட போகிறார்கள் என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

ஆளும் அரசியல்வாதிகழ் தமது நலன்களுக்காக ,அரசியலில் குந்தி இருந்து,நாட்டையும் மக்களையும் சிந்திக்காது உள்ளதன் விளைவே ,இலங்கையை விட்டு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணி செய்ய கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது .

1800 வைத்தியர்கள் நாட்டை விட்டு ஓட்டம்

கோட்டபாய ட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடி காரணமாக, இலங்கை பொருளாதரத்தில் பெரும் பின்னடைவை சந்தித்தது .

அதனை அடுத்து இதுவரையான கால பகுதியில் 1800 மருத்துவர்கள் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியுள்ளனர் , என்கின்ற தகவல் வெளியிட பட்டுள்ளது .

கற்றவர்கள் ,மருத்துவர்கள் ,நீதிபதிகள்,சட்டத்தரணிகளுக்கு எதிராக ,இலங்கை ஆளும் வர்க்கம் மேற்கொள்ளும் அடாவடிகள்,அடக்குமுறை ,சம்பள வெட்டு காரணமாகவே ,இவர்கள் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .