இலங்கையை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றில் நிறுத்துக-கனடாவில் வாகன பேரணி

Spread the love


யுத்தக் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றிற்காக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்துமாறு கனடாவை

வலியுறுத்துவதற்காக கனேடிய தமிழ் சிவில் சமூக உறுப்பினர்கள் ரொறன்ரோவிலிருந்தும்.மொன்றியலிலிருந்தும் ஒட்டாவாவிலுள்ள

பாராளுமன்ற வளாகம் வரையிலான வாகனப் பேரணி ஒன்றினை 17ம் திகதி புதன்கிழமையன்று ஏற்பாடு செய்துள்ளார்கள்.

சிறிலங்கா தொடர்பில் தீர்மானத்தினை முன்னெடுக்கின்ற கூட்டு நாடுகளில் ஒன்றாக கனடா இருக்கின்றது.

அண்மையில், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் அவர்கள் 2021ம் ஆண்டு தை

மாதம் 27ம் தகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ள நிலவரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ)

பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை

எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் (ஓஎச்சீஎச்ஆர்) வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலுமுள்ள தமிழர்கள் இலங்கையை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ) பாரப்படுத்துமாறு ஒருமித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

    Leave a Reply