இலங்கையில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு – நீக்கிட அரசு நடவடிக்கை

Spread the love

இலங்கையில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு – நீக்கிட அரசு நடவடிக்கை


மஞ்சளுக்கு நாட்டில் நிலவும் தட்டுப்பாட்டை நீக்க பல திட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நாட்டின் தேவைக்காக, வருடத்துக்க 7 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் மஞ்சள் தேவைப்படுவதாகவும் அனால், கடந்த வருடம் வரை இதில்

ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் மாத்திரமே இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் மிகுதி 5 ஆயிரத்து 400 மெட்ரிக் தொன்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


எனினும், கடந்த வருட இறுதியில், மஞ்சள் இறக்குமதிக்குத் தடை விதிக்க

ப்பட்டதையடுத்தே மஞ்சள் தூளுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்தது என்றும் அவர் கூறினார்.

தட்டுப்பாட்டை நீக்குவதற்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, சுங்கப்பிரிவால்

    தடுத்து வைக்கப்பட்டிருந்த 600 மெட்ரிக் தொன் மஞ்சளை, சந்தைக்கு அனுப்பவுள்ளதாகவும் இவ்வருடம் சுமார்.

    2 ஆயிரத்து 200 ஹெக்டெயாரில் புதிதாக மஞ்சள் உற்பத்தி செய்ய நடவடிக்கை

    எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

    இலங்கையில் மஞ்சளுக்கு
    இலங்கையில் மஞ்சளுக்கு

        Leave a Reply