இன்றே மனதை மாற்றி விடு

Spread the love

இன்றே மனதை மாற்றி விடு

காற்று உலகில் இல்லை என்றால் -உலகில்
காணும் உயிர்கள் ஏதும் இல்லை
நாற்று வயலில் இல்லை என்றால்
நாவுக்கு சோறு ஏதும் இல்லை

ஓடும் நதிகள் வேண்டும் என்றால் – உலகில்
ஓங்கும் மரங்கள் வேண்டும்
கொரனோ உலகில் அழிந்து விட – உலகில்
கோபுர மலைகளை வேண்டும்

இயற்கை உயிரை காத்து விடும்
இன்றே அதனை வாழவிடு
இடையில் வந்த மனிதன் மட்டும்
இடரை தந்தான் கொன்று விடு

நானே முதலென நினைத்து விடும்
நகலினை இன்றே எரித்து விடு
நாடே எந்தன் முதலெனே நினைத்து
நாட்டில் உயிர்களை வாழவிடு

இயற்கை மட்டும் உயிருடன் வாழ்ந்தால்
இன்றே உலகில் பஞ்சமில்லை
இன்றே துரத்தும் நோய்களும் ஓடும்
இன்றே மனதிற்கு அச்சமில்லை …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 15-10-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply