எட்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்

Spread the love

எட்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்

ஒருவரை திருமணம் செய்த சில நாட்களுக்குப் பிறகு நகைகள் மற்றும் பணத்துடன் அவள் தப்பிச் சென்று விடுவாள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எட்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது
எட்டு ஆண்களை ஏமாற்றிய பெண் கைது

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ஊர்மிளா அஹிர்வார். 28 வயதான அவருக்கு ரேணு ராஜ்புத் என்ற மறுபெயரும் உண்டு. வசதியான ஆண்களை வளைத்து பிடித்து மயக்கி

திருமணம் செய்து கொள்வதும் பின்னர் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு ஓடுவதுதான் இவரது வேலை.

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், கோட்டா, மத்திய பிரதேசத்தின் தாமோ மற்றும் சாகர் ஆகிய இடங்களிலும் இவ்வாறு ஏமாற்றிய வந்துள்ளார். ஊர்மிளா அஹிர்வார் மீதான புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சியோனி மாவட்டத்தை சேர்ந்த தஷ்ரத் படேல் என்ற நபரை 8 வதாக திருமணம் செய்து கொண்ட ஊர்மிளா, காரில் அவரது கிராமத்திற்கு புறப்பட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவர் கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ஏற்பாடு செய்து வைத்திருந்த பாக்சந்த் கோரி என்பவர் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

இதையடுத்து மணமகன் படேல் தன்னிடம் கொடுத்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு கல்யாண பெண் ஊர்மிளா வழக்கம் போல் தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து அறிந்த காவல்துறையினர் அவரை விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர். திருமண மோசடிக்கு உதவியதாக அர்ச்சனா ராஜ்புத், பாக்சந்த் கோரி, அமர் சிங்

ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓம்டி காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.எஸ்.பாகேல் தெரிவித்துள்ளார். விசாரணையில் ஏழு ஆண்களை ஏமாற்றியதை ஊர்மிளா ஒப்புக் கொண்டார்.

    Leave a Reply