அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மறுக்கிறார் சஜித்

அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மறுக்கிறார் சஜித்
Spread the love

அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மறுக்கிறார் சஜித்

பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும், இன்று தேர்தல் சீர்திருத்தம் குறித்து கலந்தாலோசிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

”அமைச்சரவையின் கோரிக்கையின் பேரில் நாங்கள் இந்த அழைப்பை விடுக்கிறோம். இன்றைய சந்திப்பின் முடிவுகளை நான் அமைச்சரவைக்கு அறிவிப்பேன்.

தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான ஆணையை தற்போதைய அரசாங்கம் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளது” என பிரதமர் பாராளுமன்றத்திற்கு தெரிவித்தார்.

அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மறுக்கிறார் சஜித்

”பல கட்சிகள் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளன” என தேர்தல் ரத்து செய்யப்படாது என்பதை உறுதிப்படுத்தும் போது பிரதமர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தனது தலைமையில் இயங்கும் ஐக்கிய மக்கள் சக்தி குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

”முதலில் தேர்தலை நடாத்துங்கள். பின்னர் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி யோசிப்போம்.

தேர்தல் மறுசீரமைப்பு எனும் போர்வையில் அரசாங்கம் தேர்தலைப் பிற்போடவே முயற்சிக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.