அமெரிக்கா தாக்குதல் -ரசியா சீனாவுடன் ஈரான் அவசர பேச்சு

Spread the love

திடீர் அமெரிக்கா தாக்குதல் -ரசியா சீனாவுடன் ஈரான் அவசர பேச்சு

அமெரிக்காவின் பயங்கர வாதத்திற் கான போராட்டம் மத்திய கிழக்கு நாட்டில் பிசு பிசுத்து போனதாகவே கடந்த இருபது ஆண்டுகால நகர்வுகள் எடுத்து காட்டுகின்றன .

ஈராக்கிய இரும்பு அதிபர் சாதம் ,லிபியாவின் அதிபர் கடாபி ,என தமது பொருளாதர ஆக்கிரமிப்பு சுரண்டலுக்கு உயிரை இரையாக்கிய வேகத்துடன் ஈரானை அடித்து நொறுக்க புறப்பட்ட பொழுது .

அயல் வீட்டின் கூரையை இன்று பிடுங்கும் அமெரிக்கா நாளை என் வீடடையும் இடிக்குமென சுதாகரித்து கொண்ட

ஈரான் தனது அணு ஆயுத உற்பத்தி முதல் அதி நவீன ஏவுகணைகள் ,உளவு விமானங்கள் தயாரிப்பு என புதிய வரலாற்றை மைல் கல்லை எட்டி பிடித்தது .

அமெரிக்கா ,இஸ்ரேல் இணைந்து எமது நாடு மீது 2020 மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த கூடும் என எதிர்பார்க்கும் ஈரான் அதனை தடுக்கவும்

அதற்குரிய தகுந்த பதிலடியை வழங்கவும் தன்னை தயார் படுத்தியுள்ளது ,தற்போது ஈரானின் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா திடீர் தாக்குதலை நடத்தியது

அந்த தாக்குதல்கள் முன் வெள்ளோட்டமாக அமெரிக்கா பார்க்கிறது என்பதை கணித்து கொண்ட ஈரான் புதிய

ஆண்டு பிறக்கும் இந்த வேளையில் தற்பொழுது ரஷியாவில் குந்தி உள்ளார் ஈரானின் வெளியுறவு மந்திரி மற்றும் முக்கிய அதிகாரிகள் .

அடுத்து சீனாவுடனும் பேச்சில் ஈடுபட பறக்கின்றார் .
இவர்களது இந்த அவசரமான பயணத்தில் ஏதோ முக்கிய விடயம் ஈரானிய உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாகவே பார்க்க படுகிறது

அப்படி என்றால் அமெரிக்கா ,இஸ்ரேல் இணைந்து மிக பெரும் நாசகார வேலை ஒன்றை செய்ய உள்ளதே இந்த ஈரானின் அவசர சந்திப்புக்கள் எடுத்து காட்டுகின்றன

ஈரான் மூன்று நாடுகளுடன் இணைந்து ஆரம்பிக்கும் புதிய வலை பின்னலுக்குள் அமெரிக்கா சிக்குமா என்பது 2020 ன் நடுப்பகுதியில் நாம் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ள முடியும் .

விரிந்து படரப்போகும் அடுத்துவரும் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பார்வை மத்திய கிழக்கு தாண்டி தென்

ஆசியாவில் அடைக்கலம் கொள்ள போகிறது என்பதே இந்த அசைவுகளின் அவசரம் படம் பிடித்து காட்டுகிறது .video

மூன்றாம் உலக போர் தென் ஆசியாவில் இருந்தே வெடிக்கும் என்பதற்கு இவை முன்னுதாரணமாக விரிகிறது .2020 இல் இரண்டு வல்லரசுகள் உடையும் நிலை ஏற்படுமா ..?

-வன்னி மைந்தன் –

Leave a Reply