அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி
Spread the love

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க உள்ளதாக அறிவித்த நிலையில் ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரம் பெற்று வருகிறது .

இவ்வாறான கால பகுதியில் மிக பெரும் ஆயுத உதவியை உக்ரைனுக்கு வெள்ளை மாளிகை வழங்க உள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது

சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத விற்பனை

எதிர் வரும் நாட்களில் அமெரிக்கா உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் பெறுமதியான, ஆயுத உதவிகள் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

இதன் படி இந்த ஆயுதங்கள் கட்டம் கட்டமாக வழங்கிட, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .

அதன் அடிப்படையில் ஏவுகணைகள் ,பீரங்கிகள்,ராடார்கள் கவசவண்டிகள்,துப்பாக்கிகள்,தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் .டாங்கிகள் ,என்பன இவற்றில் பிரதான இடம் வகிக்கின்றன

F 35 ரக விமானங்கள்

F 35 ரக விமானங்கள் உக்ரைனுக்கு விற்பனை செய்திட அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .

இந்த F 35 ரக விமானங்கள் ஓட்டுவதற்குரிய பயிற்சிகள் ருமேனியாவில் வைத்து, உக்ரைன் சிறப்பு படை விமானிகளுக்கு வழங்க பட்டு வருகின்றன .

இவர்கள் பயிற்சி முடிவு பெற்றதும் குறித்த விமானங்களை ,உக்ரைனுக்கு விற்பனை செய்திட அமெரிக்கா நடவடிக்கையை ஆரம்பிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த விமானங்களை பயன்படுத்தி ,ரஸ்யாவின் ஏவுகணைகள் ,கப்பல் துறை முகங்கள் ,மற்றும் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டம் தீட்ட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இரண்டு மில்லியன் பீரங்கி குண்டுகள் விற்பனை

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வந்த இதுவரையான போர் கால பகுதியில் ,உக்ரைனுக்கு அமெரிக்காவினால் இரண்டு மில்லியன் பீரங்கி குண்டுகள் வழங்க பட்டுள்ளன .

அத்தனை பீரங்கி குண்டுகளும் ரஷ்யா இராணுவத்தின் மீது வீச பட்டுள்ளன .

மேலும் இதே போன்ற தொகையில் ,155 மில்லி மீற்றர் பீரங்கி குண்டுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

மிக பெரும் தொகையில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள, இந்த ஆயுதங்கள் ஊடக ,மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ,ரஷ்ய உக்ரைன் போர் நீடித்து செல்ல போகிறது என்பதை இவை காண்பிக்கின்றன .