அனுஷா சந்திரசேகரன் பாரளுமன்ற தேர்தலில் போட்டி

Spread the love

அனுஷா சந்திரசேகரன் பாரளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பொருத்தமானதாகுமா?

ஆண்களுக்கு நிகர் பெண்கள் பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பு.

மலையக தோட்ட புறங்களில் அதிகமாக தொழிலாளர்களாக இருப்பவர்கள் பெண்களே இந்த பெண்களுக்கே பிரச்சினைகள் அதிகம்.

இந் நிலையில் இந்த மலையக பெண்கள் சார்பில் அரசியலில் குரல் கொடுக்க மலையகத்தில் இருந்து ஒரு இளம் சட்டதரணி சிங்கப்பெண் அனுஷா சந்திரசேகரன்

அரசியலில் வருவது வரவேற்க்;கதக்க ஒன்றாகும். தற்போது இவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இந் நிலையில் இவர் அரசியலில் வருவதாக கூறியதை தூக்கி பிடித்துக் கொண்டு சில ஊடகங்களும் சமூக வளைதளங்களும் சமூக அமைப்புகளும் கருத்துகளை

முன்னுக்கு பின் முரணாக முன் வைத்து வருகின்றன. இதற்கு ஒரு சரியான விளக்கத்தை கொடுக்கும் வகையில்.

அனுஷா சந்திரசேகரன் பாரளுமன்ற தேர்தலில் போட்டி

இவரின் அரசியல் பிரவேசம் குறித்து பலரிடம் வினவிய போது அவர்கள் வழங்கிய கருத்துக்களின் படி.

மலையக மக்கள் முன்னணி என்பது மலையகத்தில் இருந்த புரட்சியாளர் அமரர் பெ.சந்திரசேகரன் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சியாகும். அவரின் மறைவிற்கு

பின்னர் இந்த கட்சியை அரசியல் ரீதியில் முன்னோக்கி கொண்டு செல்ல அவரது மனைவி உட்பட கட்சி ஆதரவாளர்கள் முன்னெடுத்த செயற்பாடுகள்

பின்னடைவை நோக்கியே சென்றது. இவ்வாறான நிலையிலேயே காலநிதி வே.இராதாகிருஸ்ணன் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று கட்சியை வழி நடாத்த

தொடங்கினார். இதன் பயனாக பதுளையில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் தெரிவாவதற்கும் மத்திய மாகாண சபையில் ஆர்.ராஜாராம் தெரிவாவதற்கும்

உள்ளுராட்சி சபைகளில் 31 உறுப்பினர்கள் தெரிவாவதற்கும் காலநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் தொடர்ந்து விஷேட

பிரதேசங்களுக்கான அமைச்சராக செயற்;படுவதற்கும் காரணமாக இருந்துள்ளது. திருமதி பெ. சந்திரசேகரன் அவர்களும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

இந்த கட்சியின் அபிவிருத்தியில் பல மூத்த உறுப்பினர்களும் அங்கத்தினரும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர். இந்த கட்சி மலையகத்தில் காணப்படும்

கட்சிகளில் இருந்து சற்று வேறுப்பட்டது. இதன் யாப்பு சட்டத்திட்டங்கள் திடகார்த்தமானது. அமரர் சந்திரசேகரன் இதனை முறையாக வடிவமைத்துள்ளார். இவரின் நோக்கு

யாருக்கும் சட்டம் பொதுவானது என்பதாகும்.

தொழிலாளர்களுக்கு என்று மலையக தொழிலாளர் முன்னணி செயற்படுகின்றது இதில் அங்கத்தினர் தோட்ட கமிட்டி வாழிபர் கமிட்டி மாதர் கமிட்டி தொடர்ந்து மத்திய

கமிட்டி உயர் கவுன்சில் ஆகியன செயற்படுகின்றது அரசியல் செயற்பாடுகளில் மலையக மக்கள் முன்னணியில் ஆரம்பமாக உறுப்பினர்கள் மத்திய குழு

அனுஷா சந்திரசேகரன் பாரளுமன்ற தேர்தலில் போட்டி

உயர் கவுன்சில் ஆகியன செயற்படுகின்றன. இந்த உயர் கவுனிசிலில் படித்தவர்களே அதிகமாக இருக்கின்றனர். இவர்களில் அனுஷா சந்திரசேகரனும் ஒருவர்.

இவ்வாறான நிலையில் அமரர் பெ. சந்திரசேகரின் மகளான அனுஷா சந்திரசேகரன் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகின்றார்.

இவரை கட்சியில் இணைப்பதற்கு காரணமாக இருந்தது இவர் அமரர் பெ. சந்திரசேகரின் மகள் என்ற ஒரே காரணம் மட்டும் தான்.

இணைந்த உடன் கட்சியில் பல மூத்த உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் இவருக்கு உதவி பொது செயலாளர் பதவியும் வழங்கி சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டன.; உயர் கவுன்சிலில் உறுப்பினராகவும் இருக்கின்றார்.

கட்சி காரியாலயத்தில் தனியான இட ஒதுக்கீடும் அமைச்சரின் அமைச்சின் உத்தியோகஸ்தர் பதவியும் வழங்கப்பட்டு வாகனமும் வழங்கப்பட்டது.

கட்சி செயற்பாடுகளில் அவருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துக் கொடுக்கபட்டன. நிகழ்வுகளில் இவருக்குரிய இடமும் வழங்கப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே பூகம்பம் வெடிக்கின்றது. இதற்கு காரணம் இன்னமும் சரியாக வெளிவரவில்லை.

அனுஷா கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளை

முன்னெடுப்பதில்லை அங்கத்தினரை கூட்டுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை.

கட்சி கூட்டங்களுக்கு வருவதில்லை. தனியாக செயற்பட தொடங்கிவிட்டார். முகபுத்தகங்களில் தனியான அறிக்கை ஊடகங்களுக்கு தனியான ஊடக அறிக்கைகள் கள

விஜயங்கள் தனியாக.; தான் பாராளுமன்றத்தில் போட்டி போடுகின்றேன் என்றும் கட்சியின் உயர் கவுனிசிலில் கேட்கவும் இல்லை.

ஆனால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்று அறிக்கை விட்டு உள்ளார்.

இது கட்சியைமட்டுமல்லாது ஆதரவாளர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கட்சிக்கு வெளியில் உள்ளவர்களுக்கு இந்த விடயங்கள் தெரியாது. எந்த ஒரு விடயமானாலும் முதலில் கட்சியுடன் பேச வேண்டும் கட்சியின் முடிவுக்கு செவிசாய்க்க

வேண்டும் அப்பா உருவாக்கிய கட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் அவை ஒன்றும் நடைபெறவில்லை. தற்போது மலையக மக்கள் முன்னணி வருகின்ற பாராளுமன்ற

தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் களம் இறங்க உள்ளது.

இதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி ஏற்கனவே பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் போட்டியிட உள்ளார்கள்.

இவ்வாறான நிலையிலேயே விகிதசார படி ஆசனங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இவரை வருகின்ற மாகாண சபை தேர்தலில் தலைமை வேட்பாளராக கொண்டு போட்டியிட கட்சி முடிவுகளை மேற்க் கொண்டும் இருக்கின்றது.

இந் நிலையில் என்ன செய்வது. இதனாலயே மலையக மக்கள் முன்னணியின் தலைவர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் அன்மையில் ஊடகங்கள்

கேட்ட கேள்விக்கு யாருவேனுமானாலும் கட்சியில் இருக்கலாம் போகலாம் என்று கூறினார்.

உண்மையிலேயே அனுஷா சந்திரசேகரன் அரசியலில் வருவது நல்லது தான். ஆனால் அதற்கு அவர் எடுக்கும் முடிவுகள் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

அனுஷா சந்திரசேகரன் பாரளுமன்ற தேர்தலில் போட்டி

இப்ப தான் கட்சிக்கு வந்தார். அதற்கு மலையகத்தில் நல்ல வரவேற்பும் இருந்தது. கட்சியில் இருந்து திறமையாக செயற்பட்டு மூத்தவர்களுக்கு இடம் கொடுத்து காலம்

செல்லும் போது தானவே அந்த இடத்தை அவர் தக்க வைத்துக் கொள்ளலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அந்த கட்சியில் இருக்கும் நிலையில்

தன்னுடைய அப்பாவின் கட்சி இருக்கும் போது ஏன் அவர் பிரிதொரு கட்சியில் போட்டியிட வேண்டும். பொருத்து இருந்தால் பூமியை ஆளலாம். முதலில் மாகாண சபை பின்

பாராளுமன்றம் அதன் பின்னர் அமைச்சுக்கள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கும் நிலையில் பொருத்தமற்ற சிலரின் கருத்துக்களை கேட்டு செயற்பட்டு தன்னைதானே வீனாக்கி

கொள்ள கூடாது. கட்சியின் எதிர்கால தலைமைத்துவத்திற்கு இதுவரை காலம் வரும் போது நியமிக்க கட்சி அனைத்து நடவடிக்கைகளையும்

எடுத்துள்ளது. இதற்கு சற்று பொருத்து இருக்க வேண்டும். தற்போது இலங்கையில் இருக்கின்ற அரசியல் சூழ் நிலையில் தனியாக ஒருவர் தேர்தலில் நின்று வெற்றி

பெருவது இலகுவான காரியம் அல்ல அதிலும் போட்டிமிகு மலையகத்தில் வருகின்ற தேர்தல் மிகவும் விருவிருப்பாகவும் பணக்கட்டுகள் வீசி விளையாடும்

தேர்தலாகவும் இருக்கும் இதற்கு எல்லாம் முகம் கொடுத்து அனுஷா சந்திரசேகரன் வெற்றி பெறுவேரானால் சாதனை தான் என்று கூறினர்.

Leave a Reply