அதிரடி நடவடிக்கை -பதவி விலகும் பசில்

Spread the love

அதிரடி நடவடிக்கை -பதவி விலகும் பசில்

இலங்கையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமுன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சே தனது பாராளுமன்ற எம்பி பதவியை இராஜினாமா செய்திட உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன

கொழும்பு மேற்கொள்ளும் இந்த முக்கிய அதிரடி நடவடிக்கை மூலம் பசில் பதவி விலகும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது

இலங்கையை ஆளும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, மற்றும் மகிந்த ராஜபக்சே ,இவருடன் பசில் ராஜபக்சே உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மக்கள் கோட்டா கோ கம போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்

அதன் எதிரொலியாக பசில் ராஜபக்சே பதவி விலகும் நடவடிக்கை அமைய பெறுவதாக கொழும்பு எதிரி செய்திகள் கோடிட்டு காட்டுகின்றன

மக்கள் மனதில் தாம் நல்லவர்கள் என்பதை காண்பிக்க ராஜபக்சே குடும்பம் மேற்கொள்ளும் இந்த சதுரங்க அரசியல் ஆட்டம் அவர்களை மேலும் படு பாதாளத்திற்கு அழைத்து செல்ல போவதை காண்பிக்கிறது

மக்கள் உணர்வுகளிற்கு மதிப்பு அளிக்காது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிட மறுக்கும் கோத்தபாயவின் செயல் பாடு இலங்கைக்கு கடனுதவி வழங்கும் நாடுகளுக்கு நெருக்கடியாக உள்ளது

அதனால் ராஜபக்சே குடும்பம் பதவி விலகிடும் காலம் கனிந்து வருகிறது ,எதிர் வரும் மூன்று மாத்தில் இலங்கை மிக பெரும் நெருக்கடி மற்றும் பஞ்ச நிலையில் தவிக்கும் என இலங்கை ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்து இருந்தார்

அவரதுஅந்த பேச்சின் முன்னோட்டம் ராஜபக்சே குடும்பம் பதவி விலகிட வேண்டிய நிர்ப்பந்தத்தை மறைமுகமாக ஏற்படுத்தி இருந்தார்

அதனை கருத்தில் வைத்தே ராஜபக்சே குடும்பத்தினர்
முக்கிய அங்கமாக விளங்கியவரும் சர்ச்சைகளின் நாயகனாக விளங்கிய பசில் ராஜபக்சே பதவி விலகும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது

இலங்கை அரசியலில் நடை பெறும் இந்த நேர்மறை தலைகீழ் அதிரடி நடவடிக்கை பதவி விலகும் நிலைக்கும் பசில் ராஜபக்சே மற்றும் ராஜபக்சே குடும்பத்தை அழைத்து செல்கிறது

ஐம்பது ஆண்டுகால ஆட்சி கனவும் ,இலங்கை ராஜபக்சே குடும்பத்தில் மூன்றாவது ஜனாதிபதி பசில் ராஜபக்சே தான் என்ற வரலாற்று புகழையும் இழந்து தவிக்கிறது ஆளும் ராஜபக்சே குடும்பம்

மக்களினால் விரட்டி பதவி விலகும் நிலையில் தமது அரசியல் ஆடுகளத்தை ஆட்டி சென்றதே இன்றைய இந்த கண்ணீர் நிலைக்கு காரணமாக அமைய பெற்றுள்ளது .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply