விஜய் சேதுபதி படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா

Spread the love

விஜய் சேதுபதி படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டாப்சியும், விஜய் சேதுபதியும் நடிக்கும் படத்துக்கு வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா?
டாப்சி, விஜய் சேதுபதி


பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகை டாப்சியும், நடிகர் விஜய்சேதுபதியும் நடித்து

வருகிறார்கள். இந்த படத்தில் டாப்சியும், விஜய் சேதுபதியும் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. திகில்

நிறைந்த காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

அதன்படி இப்படத்திற்கு ‘அனபெல் சுப்பிரமணியம்’ என பெயரிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனபெல்

என்பது டாப்சியின் பெயராகவும், சுப்பிரமணியம் என்பது விஜய் சேதுபதியின் பெயராகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாப்சி, விஜய் சேதுபதி

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தீபக்

சுந்தர்ராஜன் இயக்குகிறார். இவர், நடிகரும், இயக்குனருமான சுந்தர்ராஜனின் மகன் ஆவார். மேலும் இப்படத்தில் ராதிகா

சரத்குமார், தேவதர்ஷினி, பிக்பாஸ் மதுமிதா, சுரேகா வாணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு ஜெய்பூரில் நடைபெறுகிறது

Leave a Reply