முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

முல்லைதீவு பகுதியில் பல நாட்களாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த இளம் வாலிபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

இந்த இளம் வயது திருடனினால் 15 சைக்கிள்கள் திருட பட்டுள்ளன .மிக லாவகமாக வந்து சைக்கிள் திருடி செல்லும் இவரது திருட்டு சம்பவ காட்சிகள் காணொளியில் பதிவாகிய நிலையில் குறித்த இளம் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டுளளார்.

முல்லைத்தீவில் பரவலாக சைக்கிள்கள் திருட்டு சம்பவம் இடம்பெற்று வந்தது .இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில் பொலிசார் மிக லாவகமாக அந்த திருடனை மடக்கி பிடித்தனர்.

முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்
முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

திருட பட்ட சைக்கிள் அதன் உரிமையாளர்களிடம் வழங்கும் நடவடிக்கையை முல்லைதீவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இலங்கையில் சைக்கிள் பயன்பாடு அதிகரித்து காணப்படுவதால் சைக்கிள் விலை அதிகரித்துள்ளது.


அதனால் சைக்கிள் திருட்டில் பல திருடர்கள் தொடராக ஈடுபட்டு அதிக விலைக்கு சைக்கிள் விற்று வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply