வடகொரியாவுக்கு பலூனில் வைரஸ் அனுப்பிய தென்கொரியா

Spread the love

வடகொரியாவுக்கு பலூனில் வைரஸ் அனுப்பிய தென்கொரியா

வடகொரியா ; உலக நாடுகளில் கொரனோ வைரஸ் இல்லாத நாடாக உலகில் வடகொரியா விளங்கியாது .ஆனால் தற்போது தென்கொரியா பலூனில் வைரஸ் நோயை வடகொரியாவுக்குள் அனுப்பி வைத்துள்ள சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .


தென்கொரியாவில் இருந்து வடகொரியா எல்லையை கடந்து உள்நுழைந்த இந்த பலூன்கள் மூலம் இந்த கொரனோ வைரஸ் பரவியதாக வடகொரியா குற்றம் சுமத்தியுள்ளது.

வடகொரியா நாட்டுக்குள் கொரனொ வைரஸ் நோயை பரப்பிய தென்கொரியா அதற்குரிய விலையை அறுவடை செய்யும் என கடும் தொனியில் தென்கொரியாவை வடகொரியா எச்சரித்துள்ளது .

கொரோனோ வைரஸ் இல்லாது தப்பித்து வாழ்ந்து வந்த வடகொரியா நாடு தற்போது சந்தித்துள்ள இந்த நோயின் தாக்குதலினால் இதுவரை ஐந்தாயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர்.

மேலும் இந்த நோயானது வேகமாக பரவி வருவதால் வடகொரியா முடக்க நிலைக்கு செல்லும் அபாய நிலை ஏற்பட்டும் என்ற அச்சம் வெளியிட பட்டுள்ளது.

காய்ச்சல்,வாந்தி ,மற்றும் தலை சுற்று ,சலி போன்ற கடுமையான தாக்குதலுக்கு மக்கள் உள்ளாகியுள்ளதாக வடகொரியா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வடகொரியா மக்களை அச்சுறுத்தி அந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஜப்பான் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நாடுகளின் நேரடி அச்சுறுத்தலில் இருந்து தமது நாட்டை காப்பாற்றி கொள்ளும் முகமாக ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது .

வடகொரியாவுக்கு பலூனில் வைரஸ் அனுப்பிய தென்கொரியா

அதனால் வடகொரியா நாட்டை முற்று முழுதாக அழித்துவிட வேண்டும் என்பதில் உலக சண்டியர் அமெரிக்கா பலத்த முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.

மூன்று முக்கிய எதிரி நாடுகளிடம் இருந்து தமது நாட்டை பாதுகாத்து நகரும் வடகொரியா தற்போது கொரனோ நோயில் சிக்கியுள்ளது.

இந்த கொடிய நோயில் இருந்து வடகொரியா மீண்டு செல்லுமா என்பதும் பாதிக்க படும் மக்களை அவர் தம் உயிர் பலியில் இருந்து காப்பாற்றி கொள்ளுமா என்பதும் மிக சவால் வாய்ந்த ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் இறுக்கமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வடகொரியா தப்புமா ..?

ஆதிக்க சக்திகளின் அடக்குமுறை தன்னல அரசியல் தந்திரத்தில் சிக்காது விடுவித்து வீறு நடை போடுமா..?

இந்த கொடிய நோயில் இருந்து தமது நாட்டையும் மக்களையும் எவ்வாறு தற்காத்து கொள்ள போகிறது …?

என்ற சவாலான கேள்விகளுக்கு வடகொரியா நடத்த போகும் அந்த அக்கினி பரீடசையில் இருந்து முடிவுகள் வெளியாகும் என எதிர் பார்க்க படுகிறது .

எதிரி படையும் அதன் எதிரி இராணுவமும் அதன் அரசியல் தலைமைகளிற்கு வடகொரியா கூற போகும் பலமான செய்தி , வைரஸ் நோய் பரவல் தடுப்பு மூலம் எதிரிகளை ஓட வைக்க காத்துள்ளது
வடகொரியா என்கிறது வடகொரியா முக்கிய ஊடகம் ஒன்று .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply