பிறந்த நாளில் இறக்க வேண்டும் …!
நான் பிறந்த நாளு – அட
ஏன் பிறந்தன் சாமி …?
நாளுமே கோடி துன்பம்
நட்டு படைத்த சாமி …
வலியெடுக்க நெஞ்சுக்குள்ள – நீர்
வழிந்தோட கண்ணுக்குள்ள …
செத்து செத்து பிழைக்கிறேன்
சொகம் இன்றி தவிக்கிறேன் ….
கலரு என்ன கறுப்பா …
கண்ணை மூடி படைத்தவா …
தொல்லை வேணாம் விட்டு விடு
தொலைய வேணும் எடுத்து விடு …
வெறுப்பான உலகத்தில
வெந்து வாழ முடியல …
தப்பான மனிதத்தில
தாழ நிதம் முடியல ….
ஆண்டென்ன நாப்பதாச்சு
ஆயுல் வாசலாச்சு …
வந்து விட்டேன் இது போதும்
வாழ்ந்து விட்டேன் அது போதும் …
நான் பிறந்த நாளினிலே
நான் மடிய வேண்டுகிறேன் …
என் ஆசை வேண்டுதலை
என்னிறைவா தந்து விடு ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -07/03/2019