நீ மட்டும் வா

Spread the love

நீ மட்டும் வா

அஞ்சிடாத நெஞ்சு என்றால்
அருகில் வந்து நில்லு – நான்
அழைக்கும் போது ஓடி வந்து
என்னை நீயும் கொஞ்சு

பிஞ்சு போல பேசுகின்ற
உந்தன் பேச்சு வேண்டும்
பிரியமுடன் நீயணைக்கும்
பிரியா வரம் வேண்டும்

நீயும் நானும் வாழ்ந்து விட
இந்த பூமி போதும்
நீ அணைக்கும் போதினிலே
இருள் மட்டும் வேணும்

கண்ணுறங்கும் போதினிலே – உன்
காதல் பாட்டு வேண்டும் – நான்
காலம் எல்லாம் வாழ்ந்துவிட – நீ
காலடியில் வேண்டும் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 20-09-2022

Leave a Reply