நிச்சயம் நீ அழுவாய் ….!
நானும் இன்று தொழிலாளி
நாளை ஒரு முதலாளி …
நயாகராவாய் நீளுவேன்
நாள் திசையும் ஓடுவேன் ….
கண்டபடி வார்த்தைகளை
நெஞ்சுக்குள்ளே எறிந்தவனே …..
கெஞ்சுகின்ற காலம் ஒன்று
கொஞ்சி வரும் காத்திரு …..
பஞ்சு போல பிய்த்தவனே
படு பாதகங்கள் செய்தவனே …..
கொடுங்கோல் உடைத்தெறிய
கொட்டும் தேளாய் நான் மலர்வேன் …
உப்பு கண்ணீர் உடல் படிய
உள்ளம் தீயாய் எரிய ….
பற்றும் தீயாய் நான் வருவேன்
பாதகனே நீ அழிவாய் ……
முற்றுகையில் நீ அமிழ
முட்டாள் சிந்தை இன்றொழிய ….
கத்துகின்ற நாள் வரும் பார்
கை கட்டும் நிலை தரும் பார் ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -14/03/2019