தேடி வருவேன் காத்திரு

Spread the love

தேடி வருவேன் காத்திரு

இருந்தால் வருவேன் இதயம் தருவேன்
இன்றே கொஞ்சம் பொறுத்திடு …..
நாளை மலரும் வேளை ஒன்று
நமக்காய் மலரும் காத்திரு …..

வலிகள் வந்து இடையில் வீழ்ந்தால்
வாழ்வை விட்டு ஒழிவதா…?
கால பிழையால் கசங்கிய வாழ்வை
கண்ணீர் தூவி சுமப்பதா …?

ஒரு நாள் மலரும் திரு நாள் ஒன்றில்
ஓலம் ஓங்கி மறையும் …
ஓடியே வீழ்ந்த வலிகள் எல்லாம்
ஒரு நொடி அங்கே சிதறும் …

நடக்கும் கால நிகழ்வுகள் எல்லாம்
நல்லதே என்றே நம்பு …
நாளை சிறக்கும் வாழ்விற்கிது
நம்பிக்கை தரும் கொம்பு ….!

  • வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -29/03/2018
  • வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply