செல்லப்பா உனை மறவோம் ..!

Spread the love

செல்லப்பா உனை மறவோம் ..!

முரசுமோட்டை ஒன்றியத்தின்
முதலவாது மன்றத்தில்
வந்தமர்ந்த மூத்தவனே -எங்கள் …
மனத் தடத்தில் நீ இருப்பாய் …

சந்தியில வந்து நின்று
சாக்கடையை திறந்தவரை
கண்டு பொங்கி எழுந்தவனே
கள பாடல் தந்தவனே …

மிஞ்சி தமிழ் வையம் எழ
கொஞ்சு தமிழ் நீ குழைத்து
ஏந்த கருவி செய்தவனே
எங்கள் ஆசான் ஆனவனே …

கானகத்தில் அவன் இருந்து
கட்டளைகள் தந்து விட
பாட்டாலே உயிர் தந்த
பா இசை நீ தானே ….

வங்க கடல் இடையினில
வந்து வழி தடுத்துன்னை
சிறை இருத்தி வைக்கையிலும் -நீ
சிறகுடைந்து போகலையே …

மூத்தவனே நீ வந்து
முன் அமர்ந்து மகிழ்வித்தாய்
நெஞ்ச மெல்லாம் மலர்கிறது
உன் நினைவினிலே சுத்துறது …

கண் முன்னே வந்தமர்ந்து
காட்சி தந்த பண்ணவரே
முரசுமோட்டை மாநகரம் -உங்கள்
மூவரையும் மறவாது

தேகம் உடல் வேகையிலும்
தேம்பி விழி கதறையிலும்
கரம் தந்து வலி துடைத்த
காணக் குயில் நீ தானே …

செல்லப்பா உனை மறவோம் ..!
செல்லப்பா உனை மறவோம் ..!

ஓடி வந்து இங்கமர்ந்து
உன்னை பார்க்க வந்ததிந்த
கொஞ்சு தமிழ் பார்த்தாயா
கொள்ளை பிரியம் கண்டாயா …?

வாடாத மலரவனே
வைய தமிழ் மறவானே
எம் நெஞ்சில் நீ இருப்பாய்
என்றும் உன்னை மறவோமே …!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -12/04/2017

Home » Welcome to ethiri .com » செல்லப்பா உனை மறவோம் ..!

Leave a Reply