கோபம் தவிர் வாழ்வில் நிமிர்
எரியுது இங்கொரு நெஞ்சு – தினம்
எறியுது ஏனது நஞ்சு ..?
புலனது சிந்தை பிஞ்சு – இது
புவி மேல் பறக்குமா குஞ்சு ..?
திசையது அறியும் பறவை – நீ
திசையது அறியா கறவை ….
விழியது கூர்மை பறவை
விடயங்கள் அறியும் நேர்மை …
தேடினாய் என்ன சொல்லு – நீ
தேறிய நிலையை வில்லு ….
புரிதலில் கிழிதல் கொண்டாய்
புண்களை விதைத்தேன் நின்றாய் …?
அறிதலில் வேகம் கொள்வாய்
அகிலம் வியக்க எழுவாய் …
தெளிதலில் வீரியம் பெற்றால் – நீ
தெரு நிலை வாழ்வியல் கழிவாய்…..
முடிதலில் என்ன கொள்வாய் ..?
முன்னே விளக்கி செல்வாய் …?
எதுவரை வாழ்வு கூறாய் ..?- இப்போ
எரிகிறாய் ஏனோ தீயாய்…?
-வன்னி மைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -01/02/2018