காரை நகர்
அலை வந்து தாலாட்டும்
அழியாத ஊரு ….
அதன் உள்ளே ஆடுதடா
ஆக்கினைகள் நூறு …..
சிங்களத்து வால் பிடிகள்
சிரிக்கின்ற கூடு – இங்கே
சிந்தை தமிழ் வாழ வைத்தார்
சிலர் உள்ள வீடு ….
முந்தை தமிழ் சாதிகளால்
மூழ்கின்ற ஊரு …..
முனேற்றம் காணாது
மூட்டும் சண்டை பாரு ….
உப்பு மண் போலான
உள்ளங்கள் பாரு –
உதவாத சிந்தையால்
உதிர்கின்ற காடு ….
கரை காண முடியாத
காரை மா நகரு …..
காலம் இக்கால
களியாட்ட பேரு ……
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -21/09/2017
வன்னி மைந்தன் கவிதைகள்