நிலவே வா உன்னை நான் தாங்குவேன்

Spread the love

நிலவே வா உன்னை நான் தாங்குவேன்

பூவை தாங்கி பூவும் ஒன்று
புழுவாய் நெளிகிறதே – இந்த
பூவை வாட வைத்தார் இந்த
புவியில் இருக்கிறதே ….

கலைந்த கூந்தல் கவலை சொல்ல
கண்கள் சிவக்கிறதே – இவள்
காய்ந்த வயிறு குளிரத்தானே
கை சுமை குறைக்காரோ …?

வாழும் போதே வாடும் பூவை
வழியோர் காணலையோ …?
வறுமை கூடி வாடும் மலரை
வாடிட விடுவாரோ ….?

சின்ன பூவே சின்ன பூவே
சிரிப்பை தொலைத்தாயே – உன்
சிந்தை குறைக்க கண் முன்னே
சிலர் தான் உள்ளாரோ …?

நிலவே வா உன்னை நான் தாங்குவேன்
நிலவே வா உன்னை நான் தாங்குவேன்

கசங்கி போனாய் என்று தானோ
காணா செல்கின்றார் …?
கண்ணே உன்னை கண்ணில் காட்டு
கவலைகள் யான் துடைப்பேன் ….

விண்ணை தொட்டு நீயும் ஆழ
விசாலம் யான் இடுவேன் ….
விழுந்து ஓடும் கண்ணீர் துளிக்கு
விடுதலை நான் தருவேன் ….

உன்னை போல பெண்ணை எல்லாம்
உற்று பார்க்காரே ….
உலகம் அறிந்தாய் நீ என்றால்
உன்னை படர்வாரே….

காற்று வந்து நண்பன் ஆனான்
கண்ணீர் துடைக்குதடி ….
இயற்கை கொண்ட பாசம் கூட
இங்கு மனிதர்க்கு இல்லையடி …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -21/09/2017

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply