அண்ணனுக்கு அகவை 63

Spread the love

அண்ணனுக்கு அகவை 63

எரிமலை வெடிக்கின்ற விழியடா – இவன்
எழுகின்ற திசை எங்கும் நெருப்படா ..
பணியாத பகை கொண்ட உளமடா- இவன்
பாய்கின்ற புலியணி தலைவண்டா……

தளராத குணம் கொண்ட புலியடா எந்த
தடை வந்தும் குலையாத புனிதண்டா ….
விலை போகா எங்கள் வீரண்டா-
விசாலமாய் படை கட்டி ஆண்டாண்டா …..

இவன் போலதலைவன் யாருண்டோ ..?
இனியேனும் யாரும் வருவாரோ …?
உறவாகி உள்ளத்தில் உறைந்தவன்
உணர்விலே கடவுளாய் நின்றவன் ……

இன்று நீ எழுச்சி கொண்ட நாள்
இல்லத்தில் எரிகின்ற பிறந்த நாள் …
வீரத்தின் உருவை வணங்குவோம்
விரைவிலே தருவான் ஈழம் நம்புவோம் …

ஆராரோ பாடும் அன்னையே – நீ
ஆயிரம் ஆண்டுகள் வாழ்வாய்….
இந்த நாள் உந்தன் இனிய நாள்
இரு கரம் கூப்பியே வாழ்த்தினோம் …!

வன்னி மைந்தன்– ( ஜெகன் )
-ஆக்கம் -26/11/2017

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply