உன்னை மறந்தது பிழை தானோ

Spread the love

உன்னை மறந்தது பிழை தானோ

இறைவா இறைவா நீ இருந்தால்
இன்றே எனக்கொரு பதிலிடுவாய்….
எதுவரை என்னை நீ வதைப்பாய்
என் கேள்விக்கு என்ன பதலிடுவாய்…?

ஒருமுறை நீயொரு வர மிடுவாய்
ஓராயிரம் ஆண்டுகள் நான் வாழ்வேன் …
இறப்பும் பிறப்பும் ஒருமுறை தான்
இதை எழுதி வைத்தவன் நீயே தான் …

எழுதி வைத்து படைத்தவனே
என் இன்னல் துடைப்பாய் என்று தான் ..?
கல்லாய் உள்ளாய் கடவுள் என்றால்
கரங்கள் நீட்டி பயனில்லை ….

மூவேளை வணங்கும் படி நிலையால்
முட்டாளாகி போனேன் யான் …
இறைவன் இல்லை என்றே தான்
இறைவா உன்னை மறந்து விட்டேன் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -25/12/2017

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply