Search Results for: யாழ்ப்பாணம்
உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம்
உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம்
உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம் ,உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில்
யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது.
பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது.
இலங்கையின் செழுமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மேம்பாட்டு உத்தியின் ஒரு பகுதியாகப் பிராந்தியப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளையும் இது வெளிப்படுத்துகிறது.
ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுடன் யாழ்ப்பாணமும் இணைக்கப்பட்டிருப்பது, வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும்
இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.
உலகின் மிகவும் நம்பகமான பயண ஊடக வர்த்தக நாமங்களில் ஒன்றாகும்
1970-இல் நிறுவப்பட்ட லோன்லி பிளானட், உலகின் மிகவும் நம்பகமான பயண ஊடக வர்த்தக நாமங்களில் ஒன்றாகும். இது உலகளவில் 150 மில்லியனுக்கும்
அதிகமான வழிகாட்டிப் புத்தகங்களை விற்றுள்ளதுடன், விரிவான டிஜிட்டல் அணுகலையும் கொண்டுள்ளது.
லோன்லி பிளானட்டின் கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டில் பயணிக்க சிறந்த 25 இடங்கள் இவை,
பெரு, தென் அமெரிக்கா
யாழ்ப்பாணம், இலங்கை
மெயின், அமெரிக்கா
காடிஸ், ஸ்பெயின்
ரீயூனியன், ஆப்பிரிக்கா
போட்ஸ்வானா, ஆப்பிரிக்கா
கார்டஜீனா, கொலம்பியா
பின்லாந்து, ஐரோப்பா
டிப்பரரி, அயர்லாந்து
மெக்சிகோ நகரம்
கெட்சால்டெனாங்கோ, குவாத்தமாலா
பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா
சார்டினியா, இத்தாலி
லிபர்டேட், சாவ் பாவ்லோ
யூட்ரெக்ட், நெதர்லாந்து
பார்படாஸ், கரீபியன்
ஜெஜு-டோ, தென் கொரியா
வடக்குத் தீவு, நியூசிலாந்து
தியோடர் ரூஸ்வெல்ட் தேசியப் பூங்கா, வடக்கு டகோட்டா
குய் நோன், வியட்நாம்
சீம் ரீப், கம்போடியா
பூக்கெட், தாய்லாந்து
இக்காரா-ஃப்ளிண்டர்ஸ் ரேஞ்சஸ் மற்றும் அவுட்பேக், தென் ஆஸ்திரேலியா
துனிசியா, ஆப்பிரிக்கா
சாலமன் தீவுகள், ஓசியானியா
யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி அனுரா
யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி அனுரா
யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி அனுரா வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.President Anuradha is coming to Jaffna.
இலங்கையின் பத்தாவது ஜனாதிபதி அனுரா குமார திசநாயக்க
தமிழர் வடக்கு பகுதியாக விளங்கும் கலாச்சார பட்டினமாக இருக்கும் யாழ்ப்பாணம் நோக்கி இலங்கையின் பத்தாவது ஜனாதிபதி அனுரா குமார திசநாயக்க இன்று பயணம் ஆகிறார்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நோக்குடன் இவர் அங்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து மாதங்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு தமிழருக்கு ஏதும் செய்யவில்லை.
தவறான வழியில் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு இன்று அவர் ஓட்டு அரசியலுக்காக இன்று அவசர அவசரமாக இங்கு வருகிறார் .
மீன்பிடி துறைமுகப் பணி
மீன்பிடி துறைமுகப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நோக்குடன் இன்று அங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல குடி வரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாணத்தின் பிராந்திய அலுவலகம் ஒன்றும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்

- டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த GMOA முன்மொழிவு

யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்
யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்
யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் ,யாழ்ப்பாணம், கொழும்பு பொது போக்குவரத்து சேவைக்காக குளிரூட்டப்பட்ட இரு சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளது .Jaffna Colombo Air-conditioned Luxury Bus
யாழ், கொழும்பு போக்குவரத்து
யாழ், கொழும்பு போக்குவரத்தில் இதுவரைகாலமும் தனியார் தரப்பினரே இவ்வாறான பஸ் சேவையை வழங்கி வந்த
நிலையில், இனி அரச தரப்பாலும் சிறப்பு சேவையை வழங்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த ஆடம்பர பேரூந்துகள் இலங்கை போக்குவரத்து யாழ் டிப்போவிடம் நேற்று கையளிக்கப்பட்டன.
பொதுநலவாய மாநாடு
இலங்கையில் நடந்த பொதுநலவாய மாநாட்டுக்காக கொண்டுவரப்பட்ட சொகுசு பஸ்கள், சில நாட்கள் பாவனையின் பின்னர் அப்படியே கைவிடப்பட்டன.
குறித்த பஸ்கள் திருத்தப்பட்டு – நவீனமயப்படுத்தப்பட்டு எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஓர் அங்கமாகவே இரு பஸ்கள் யாழ். டிப்போவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சிக்கும் பஸ்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் .


யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்
யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்
யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல் ஒன்று எதிரி இணையத்தினால் கடந்த தினம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற நிகழ்கால நிகழ்வுகள், யாழ்ப்பாணத்தின் வீரம் ,இன்று யாழ்ப்பாணம் இன்று எவ்வாறு சிதைந்து கொண்டிருக்கிறது ,என்கின்ற சமூக அக்கறையுடனும் ,வீரத்தினுடைய பறை சாட்டுதலுடன் இந்த பாடல் வெளியாகி உள்ளது.
எங்களுடைய யாழ்ப்பாணம் மன்னே, வீரமான மண், தலைவர் பிறந்த மண் ,அந்த மண்ணில் தறுதலைகளாக ,கஞ்சா ,போதை தலைவிரித்து ஆடுவதை, இந்த பாடலில், பாடல் ஆசிரியர் ராகவி லண்டனையைச் சேர்ந்தவர் குறிப்பிட்டு பாடலை அசத்தியிருக்கின்றார்.
இந்தப் பாடலுக்கான இசையை ,சிறந்த முறையில் இளங்கோ செல்லப்பாவும், மதுரை குரலோன் எங்கள் அன்பு தம்பி பாவேந்தன் அவர்களும் பாடிய அசத்தியிருக்கிறார்கள்.
பாடல் வெளியான சில நிமிடங்களில், வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அதை ஒளிபரப்பப்பட்ட பொழுது ,மக்கள் மத்தியில் இருந்து ஏராளமான வாழ்த்துகள் குவிந்தன.
வரிகள் என்பது சடலம் ,இசை என்பது உயிர் ,ஆகவே அதை உயிரோட்டமாக கொடுத்து இருக்கிறார்கள் .பாவேந்தன் அவர்களும் இளங்கோ செல்லப்பா அவர்களும் .
புதிய பாடல் ஆசிரியர்கள் 100 பேரை அறிமுகம் செய்யும் திட்டத்தில் வன்னி மைந்தன் டிக் தளம் களமிறங்கியது.
அவ்வாறான அடிப்படையில் வன்னி மைந்தன் tiktok தளத்தின் ஊடாகவும் ,எதிரி இணையம் என்பன இணைந்து மூன்றாவது பாடலாசிரியராக, ராகவி அவர்களை இந்த உலக மக்களிற்கு நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
லண்டன் ராகவி படைத்த யாழ் மண்ணே என்ற பாடலை ,நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.
கீழே இணைப்பு உள்ளது இவர் போன்று நீங்களும் பாடல்கள் எழுத விரும்பினால் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள் 0044 7536707793
புதிய பாடல்களை அறிமுகப்படுத்த இளங்கோ செல்லப்பா ,பாவேந்தன் அவர்கள் இணங்கி இருப்பது பாராட்டுதலுக்கு .உரியது .
நாள்தோறும் புதிய புதிய பாடல்கள் வெளியாக இருக்கின்றன .
அதைக் கேட்க சிறந்த காணொளி காட்சி அமைப்புக்களை பார்க்க மறக்காதீங்க எம் சொந்தங்களே .
பார்வையாளராக உள்ள நீங்களும் இதில் பங்காளியாக மாற இன்றே வாருங்கள்.தமிழை வளர்ப்போம் புதிய புரட்சி படைப்போம் .
எதிரிஇணையம் ,வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தின் புதிய பாடலாசிரியராக மூன்றாம் இடத்தையும் ,முதலாவது பெண்ணாகவும் ராகவி அவர்கள் தடம் பதித்து சாதனை படைத்துள்ளார் .
வாழ்த்துக்கள் ராகவி அவர்களே.மிக்க நன்றி இளங்களோ செல்லப்பா மற்றும் பாவேந்தன் ஆகியோருக்கும் .
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும் .
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட குழுவினர் கள விஜயமொன்றை வியாழக்கிழமை (10) மேற்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான சனத் ஜயசூரிய குறித்த விஜயத்தில் பங்கேற்றார்.
மண்டைதீவுக்கு விஜயம் செய்த குழுவினர் மைதானம் அமைப்பது தொடர்பான நிலைமைகளை ஆராய்ந்தனர்.இதன்போது பாராளுமன்ற
உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், விளையாட்டு திணைக்களத்தின் அதிகாரிகள், பிரதேச செயலாளர், இராணுவத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் 30000 வேலை வாய்ப்புக்கள்
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் 30000 வேலை வாய்ப்புக்கள்
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் 30000 வேலை வாய்ப்புக்கள் ,யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொது பயன்பாட்டிற்கு கையளிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கீரிமலை ஜனாதிபதி மாளிகை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகை அப்பகுதியில் உள்ள தனியார் காணிகளையும் கையகப்படுத்திய நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை, அல்லது காணிக்கான பெறுமதியை வழங்க முடியும்.
தொடர்ந்து சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கோ, சுற்றுலாத்துறைக்கோ ஜனாதிபதி மாளிகையை கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
தையிட்டி விகாரை,
யாழ். மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் தீர்மானங்களை புறம்தள்ளி தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அதன் போது, தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியாருக்கு, அருகில் உள்ள விகாரை காணிகளை வழங்குவதற்கு, அல்லது அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.
ஜனாதிபதியும் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அதனை பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனும் ஏற்றுக்கொண்டார்.
இருந்த போதிலும், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டவிரோதமான முறையில் மதில் காட்டினாலே அகற்ற சட்டம் இருக்கையில், சட்டவிரோதமான முறையில், ஒருங்கிணைப்பு குழு தீர்மானங்களையும் மீறி அடாத்தாக கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும். அது எந்த விதத்திலும் இந நல்லிணக்கத்திற்கோ, மாற்றத்திற்கோ ஏற்றதல்ல என தெரிவித்தார்.
யாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள்,
யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன பிரதேச செயலக பிரிவுவாரியாக சாவகச்சேரியில் 14, நல்லூரில் 07, தெல்லிப்பழையில் 06, யாழ்ப்பாணத்தில் 03, உடுவிலில் 03 என 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன.
எனவே இந்த புகையிரத கடவைகளை பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும்.
அதேவேளை யாழில் நேர அட்டவணைக்கு ஏற்ப 38 புதிய பேருந்துகள் தேவையாக உள்ளன.
அந்தவகையில் யாழ்ப்பாணம் சாலைக்கு 23 பேருந்துகளும், பருத்தித்துறை சாலைக்கு 10 பேருந்துகளும், காரைநகர் சாலைக்கு 05 பேருந்துகளும் தேவையாக உள்ளன.
யாழ்ப்பாணத்தில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுகின்றன. யாழில் 06 வீதி சமிக்ஞை விளக்குகளே காணப்படுகின்றன.
எனவே வீதி விபத்துக்களை குறைக்க வீதி சமிக்ஞைகளை அமைக்க வேண்டும் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
மாவட்ட செயலரினால் பேருந்து தொடர்பில் கூறப்பட்டதற்கு, மார்ச் மாதமளவில் 10 புதிய பேருந்துகள் வழங்கவும் மேலும் 10 திருத்தி அமைக்கப்பட்ட பேருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.
30 ஆயிரம் வேலை வாய்ப்புக்கள் உள்ளன,
அரச வேலைக்கு 30 ஆயிரம் வெற்றிடங்கள் உள்ளன. குறிப்பாக பொலிஸ் திணைக்களத்தில் அதிகளவான வேலை வாய்ப்புகள் உள்ளன. தமிழ் மொழி மூல பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அதனால் பொலிஸ் வேலைக்கு இளையோர் இணைய முன் வர வேண்டும். தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைய வந்தால் 9 ஆயிரம் பேர் வரை ஆட்சேர்ப்பு செய்ய நடவக்கை எடுக்க முடியும்.
அதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இளையோரை பொலிஸ் வேலையில் இணைய ஊக்கப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
அச்சுவேலி – தொண்டமானாறு வீதி புனரமைக்க நடவடிக்கை,
அச்சுவேலி தொண்டமனாறு வீதியின் 7 கிலோ மீற்றர் வரையான தூரத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை சரியாக முழுமையாக செய்யாது திருப்பி அனுப்பப்படுவது வடக்கு மாகாணத்தில் அதிகமாக இருக்கின்றது. அதிகாரிகள் அரசியல் வாதிகளை கைகாட்டி நிதியை திருப்பியனுப்பும் நிலை கடந்த காலத்தில் இருந்தது. ஆனால் இனி அவ்வாறு இருக்க முடியாது.
எனவே யாழ். மாவட்டத்தில் உள்ள குறுக்கு வீதிகள் , புனரமைக்கப்படாமல் குறையில் காணப்படும் வீதிகள் என அனைத்து வீதிகளையும் புனரமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தினார். அத்துடன் மீன்பிடி இறங்கு துறைகளையும் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இராணுவத்தின் பங்களிப்புடன் வீதி தடைகள்,
வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதன் போது, பொலிஸார் அதனை கட்டுப்படுத்துவதற்கு தமக்கு வாகன வசதி இல்லை என குறிப்பிட்டனர்.
அதனை அடுத்து இராணுவத்தினரது பங்களிப்புடன் வீதித் தடை, காவலரண்கள் அமைத்து தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அர்ச்சுனாவால் அலறிய யாழ்ப்பாணம் |ஓடிய வெள்ளை வேட்டிகள்
அர்ச்சுனாவால் அலறிய யாழ்ப்பாணம் |ஓடிய வெள்ளை வேட்டிகள்
அர்ச்சுனாவால் அலறிய யாழ்ப்பாணம் |ஓடிய வெள்ளை வேட்டிகள் ,யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் குவிந்த மக்கள் .
காணொளியில் விபரம் உள்ளே
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

அர்ச்சுனா வெற்றி வேட்பாளர் |அதிரடி ஆட்டம் அலறும் யாழ்ப்பாணம்
அர்ச்சுனா வெற்றி வேட்பாளர் |அதிரடி ஆட்டம் அலறும் யாழ்ப்பாணம்
அர்ச்சுனா வெற்றி வேட்பாளர் |அதிரடி ஆட்டம் அலறும் யாழ்ப்பாணம்,பதமாலோஜினி நவரட்ணம் வழங்கிய சிறப்பு செவ்வி .
மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் சுயேட்சை குழுவில் போட்டியிடும் ,உடுப்பிட்டி வெற்றி வேட்பாளர் லொஜி என்றழைக்க படும் பத்மலோஜினி அவர்கள் வழங்கிய அதிரடி தேர்தல் பரப்புரை .
புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் ,புதிய அதிரடி ஆட்டத்தை காண உங்கள் ஓட்டை இவர்களுக்கு போடுங்க ,அரியணையில் ஏற்றுக .
வெற்றி வேட்பாளர் சிறப்பு செவ்விய முழுமையாக கேட்க காணொளியை பாருங்கள் .
யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிள்ளை கடத்தல்
யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிள்ளை கடத்தல்
யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிள்ளை கடத்தல் ,யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிறந்த சிசு ஒன்றை கடத்தி விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்னதாக யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிறந்த சிசு ஒன்றினை மருத்துவர் ஊடாக கடத்தி வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பவம் என்று தற்போது வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் நமக்கு வழங்கிய ரகசிய தகவலுடன் ஆதாரங்களுடன் இவை வெளியாகியுள்ளது .
மேற்படி விடயம் விரைவில் எமது எதிரி இணையத்தின் ஊடாகவும் எமது சமூக ஊடகங்கள் வாயிலாகவும் உரித்து தொங்க விடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மருத்துவமனைக்கு தமது குழந்தைகளை பெற்றுக் கொள்ள வந்திருந்த இந்த பெற்றோர்களுக்கு இந்த விளையாட்டு இடம்பெற்றுள்ளது.
பிள்ளைகளை கடத்தி விற்பனை செய்கின்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ள இந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எந்த காலத்தில் எப்படி எப்பொழுது யாரால் எங்கே எவ்வாறு இடம் பெற்றது என்பது தொடர்பாகவும் ,அதற்கு எதிராக எடுக்கப்பட்ட பல்வேறுபட்ட நடவடிக்கை தொடர்பாக முழுமையான ஆதாரங்களுடன் இந்த விடயம் சிக்கி இருக்கிறது.
யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் பிள்ளைகளை கடத்தி விற்பது மற்றும் அவயவங்கள் உடல் உறுப்புகள் விற்பனை செய்வது, தவறான சிகிச்சை ஊடாக பலர் பலியாகி வருகின்ற சம்பவங்கள் அம்பலமாகி வருகின்ற நிலையில் இப்பொழுது இந்த விடயம் சூடு பிடிக்கிறது.
மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் குற்றம் சுமத்துவது எமது நோக்கம் இல்லை, ஆனால் மருத்துவமனை நம்பி வருகின்ற பொழுது மருத்துவர்கள்சிசுவை கடத்தி இந்த குழந்தைகள் விற்கப்படுகின்றது மிகப்பெரும் குற்றமாகும்.
ஆதலால் வரும் சில நாட்களில் அல்லது காலங்களில் மிக முக்கியமான இந்த விடயம் எடுத்துப் பேசப்படும் .
அவை உலக அரங்கின் முக்கிய ஊடகங்கள் வாயிலாக எடுத்து கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதாக பாதிக்கப்பட்ட தரப்பு தெரிவிக்கின்றது.
சிக்கியுள்ள யாழ்ப்பாண மருத்துவமனை மாபியா குழு .பின் [ புலத்தில் மறைந்திருக்கும் அரசியல் .
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

யாழ்ப்பாணம் அர்ச்சுனா வந்தார்
யாழ்ப்பாணம் அர்ச்சுனா வந்தார்
யாழ்ப்பாணம் அர்ச்சுனா வந்தார் ,மருத்துவர் அர்ச்சனா இராமநாதன் இன்று வளமையாக யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு வருகிற உள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இவரது இந்த வருகை எடுத்து இவரை கண்டு திரளாக திரண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
முகநூல் பக்கத்தில் தனது பயணத்தை ஆரம்பித்த அர்ச்சனா ராமநாதன் தற்பொழுது tiktok வாயிலாகவும் தனது பயணத்தை ஆரம்பிக்க போவதாகவும் அறிவித்திருந்தார்,.
தனக்கு எதிராக tiktok வலைத்தளத்தில் நடத்தப்படுகின்ற பரப்புரைகளை முறியடிக்க தான் பயன்படுத்தி அதன் ஊடாக மக்கள் மத்தியில் வர உள்ளதான தகவலையும் வெளியிட்டுள்ளார்.
அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்த அதிரடியை காட்டிய அர்ஜுன இராமநாதன், தற்பொழுது நிலவும் டிக் டாக்கில் தான் பயணிக்க உள்ளதான இந்த விடயம் மக்கள் மத்தியில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
15 வருட கால இடைவெளியின் பின்னர் மிகவும் நேர்மையான ஒரு மனிதராக அர்ச்சனா ராமநாதன் காணப்படுவதாகவும் ,இவர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு சிறந்த ஒரு விழிப்புணர்வையும் ,அல்லது சிறப்புகளையும் செய்வார் என மக்கள் கருதுகின்றனர்.
அதனால் இவருக்கு உலகளாவிய ரீதியில் மக்களது ஆதரவு பல்கிப் பெருகி வருகின்றது.
அந்த ஆதரவினை ஏற்றுக்கொள்ள முடியாத தற்பொழுது இவருக்கு எதிரான கறை பூசல்களை அவதூறு பரப்புகளை தீவிரமாக நடத்தி வருகின்றனர் .
ஆனாலும் அது கடந்து அவர் பயணிப்பதாக தற்பொழுது அவரை கண்ணுற்றாலே வெள்ளை வேட்டிகள் வடகிழக்கு பகுதியில் பீதியில் உள்ள தான தகவல்களும் வெளியாகி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு செல்லும் இவர் அங்கு தனது விளையாட்டு போட்டியை முடித்துக்கொண்டு சாவ கச்சேரியில் உள்ள தனது ஹோட்டல் அறையில் தங்குவார் எனும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு சாவகச்சேரி மருத்துவமனையிலும் மக்கள் குவியல் கூறுகின்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்கள்
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்கள்
யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் பட்டா வாகனம் என்பன இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது.
குறித்த வன்முறைச் சம்பவம் இன்று (15) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மானிப்பாயில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
யாழ்ப்பாணம் மானிப்பாயில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
63 வயதுடைய சாந்தினி எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும், நேற்றைய தினம் வீட்டில் சடலமாக காணப்பட்டதை அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்து
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்து
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானது.
குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன.
விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சித்தங்கேணியைச் சேர்ந்த குறித்த நபர், யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கீரிமலைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பிய கணவன் மற்றும் மனைவியை பொன்னாலை பகுதியில் உள்ள கடற்படை முகாமுக்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்றது.
கணவனை ஒரு வாகனத்திலும், மனைவியை ஒரு வாகனத்திலும் கடத்திய வன்முறை கும்பல், மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கி விட்டு சென்றது.
பின்னர் கணவனை கடத்தி சென்றவர்கள் அவரை கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகாயங்களுடன் வட்டுக்கோட்டை வைத்தியசாலை முன்பாக வீசி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயத்துடன் காணப்பட்டவரை வைத்தியசாலை பணியாளர்கள் மீட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேவேளை இளைஞன் கடத்தப்படும் போது கடற்படை முகாமில் இருந்த நான்கு கடற்படையினரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டில் படுகொலை
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டில் படுகொலை
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐவரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) பொலிஸாரால் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது பொலிஸார் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி கோரிய நிலையில் மல்லாகம் நீதவான் 24 மணி நேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போது 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்ற இளைஞர் கடத்தப்பட்டு வாள்வெட்டு மற்றும் சித்திரவதைக்கு இலக்காகியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் நேற்று கிளிநொச்சி பகுதியில் பதுங்கியிருந்த வேளையில் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டது.
உயிரிழந்த இளைஞனை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட கார் நேற்று இரத்த கறைகளுடன் மீட்கப்பட்டதுடன் குறித்த காரில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் பொல்லுகள், இரும்பு கம்பிகள் என்பனவும் சந்தேக நபரொருவரின் காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேக நபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டார்.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் போதைப்பொருள் கொடுத்து நண்பனின் உயிரை பறித்த நண்பன்
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் போதைப்பொருள் கொடுத்து நண்பனின் உயிரை பறித்த நண்பன்
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) இளைஞன் ஒருவரால் தனது நண்பருக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டதால் குறித்த நண்பர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர், அவற்றில் இருந்து மீண்டு, வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நண்பனின் அழைப்பின் பேரில் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்ற வேளை போதை பொருளை இளைஞனுக்கு கொடுத்துள்ளனர்.
நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனையில் இருந்து மீண்ட நிலையில் , மீண்டும் போதைப்பொருளை பாவித்தமையால் , அதீத போதை காரணமாக இளைஞனின் உடல் நிலை மோசமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் போதைப்பொருள் கொடுத்து நண்பனின் உயிரை பறித்த நண்பன்
அதனை அடுத்து, இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த மற்றைய இளைஞன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இளைஞன் தாயாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து , தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் , நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார்.
தயார் இளைஞன் கூறிய இடத்திற்கு சென்ற வேளை , மயங்கிய நிலையில் காணப்பட்ட தனது மகனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை , இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காங்கேசன்துறை பொலிஸார் , இளைஞனை அழைத்து போதைப்பொருளை கொடுத்த , மற்றைய இளைஞனை கைது செய்து , மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தியதை அடுத்து , வைத்திய அறிக்கையில் இளைஞன் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – வள்ளிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருமே நேற்று (06) கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவினரே மூவரையும் கிளிநொச்சியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்தனர்.
தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஹயஸ் வாகனம் மற்றும் இரண்டு வாள்களும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன என்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (04) தெல்லிப்பழையில் ஹயஸ் வாகனம் ஒன்றில் வந்த கும்பல் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியது. அதில் ஒருவர் காயமடைந்தார்.
தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றவர்களைத் துரத்திச் சென்று பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதும், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.மேனனின் கீழ் உள்ள உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கிளிநொச்சிப் பகுதியில் வைத்து நேற்று கைது செய்தனர்.
6 மாதங்களுக்கு முன்னர் தெல்லிப்பழை பகுதியில் வைத்து ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்குடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹையஸ் வாகனத்தின் ரயர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் அந்த ரயர் மாற்றப்பட்டதுடன் சூடு பட்ட அடையாளங்களை மறைக்க ஏனைய பாகங்களை மாற்றவும் முயன்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
தலைமறைவாகியுள்ள மூவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், கைது செய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்கான நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு
- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்
- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்
- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை
- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்
- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு
- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ
- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு
- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது
- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்
- டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த GMOA முன்மொழிவு
தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் அக்செயா அனந்தசயனன்
தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் அக்செயா அனந்தசயனன்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்செயா அனந்தசயனன், மருத்துவராகுவதே தனது இலட்சியம் என்றார்.
சிறந்த பெறுபேற்றை பெற்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றதில் தமிழ் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையாக உள்ளது. பெறுபேற்றை கல்வி நடவடிக்கையில் ஒரு படிக்கல்லாகவே பார்க்கிறேன்.
உயிரியல் கற்கையை தெரிவு செய்து மருத்துவ பீடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே எனது இலட்சியம். பெற்றோருக்கும், பாடசாலை சமூகத்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் அக்செயா அனந்தசயனன்
விஞ்ஞான பாடத்திற்கும் ஆங்கில இலக்கியம், சிங்களம் ஆகிய தொகுதி பாடங்களுக்குமே தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சென்றேன்.கணித பாடத்தை தரம் ஆறு முதல் தந்தையிடமே கற்றேன்.
சாதாரண தர மாணவர்கள் சாதாரண பரீட்சையை உயர்தரத்திற்கான சிறு வழிகாட்டாலாக கருதி எதிர்கொள்ள வேண்டும் – என்றார்.
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்செயா அனந்தசயனன் 9 ஏ பெறுபேறுகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
குறித்த மாணவியின் தந்தை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கணித விரிவுரையாளராகவும் தாய் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றனர்.
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு
- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்
- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்
- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை
- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
யாழ்ப்பாணம் நல்லூர் மாவீரர் நாள் video
யாழ்ப்பாணம் நல்லூர் மாவீரர் நாள் video
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மாவீரர் நாள்
கார்த்திகை கண்ணீர் சொரியும் மாவீரர் நாள்
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு
யாழ்ப்பாணம் சிறைச்சாலை கூரை மீதேறி உண்ணாவிரதமிருந்த கைதி
யாழ்ப்பாணம் சிறைச்சாலை கூரை மீதேறி உண்ணாவிரதமிருந்த கைதி
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரையின் மேலேறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சிறைக்கைதி ஞாயிற்றுக்கிழமை (28) மதியம் சிறைச்சாலை அதிகாரிகளினால் கீழே இறக்கப்பட்டுள்ளார்.
அவ்வாறு இறக்கப்பட்ட கைதி சிறைச்சாலையின் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை கூரை மீதேறி உண்ணாவிரதமிருந்த கைதி
குற்றசெயல்களில் ஈடுபட்ட கைதாகி குருவிட்ட சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். அதன்பின்னர், யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு அவர், மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து தன்னை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி சனிக்கிழமை (17) மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் இன்று (28) மதியம் கீழே இறக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் மாத்தறையைச் சேர்ந்த புஷ்பகுமார (வயது 41) என்பவரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு கீழே இறக்கப்பட்டார். அத்துடன் அவருடைய போராட்டமும் முடிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






































