யாழ்ப்பாணம் கல்முனை புத்தளம் மாவட்டங்களில் டெங்கு

நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
Spread the love

யாழ்ப்பாணம் கல்முனை புத்தளம் மாவட்டங்களில் டெங்கு

நாட்டில் மீண்டும் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 1,602 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் (390) நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி, கடந்த வாரத்தில் கல்முனை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் தற்போது 68,928 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் 27,844 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டனர்.

எனவே, டெங்கு நோயின் பரவலைக் கருத்தில் கொண்டு 41 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அனர்த வலயங்களாக
பெயரிடப்பட்டுள்ளன என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.