மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு
Spread the love

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு

3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேகாலை, பதுளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் கேகாலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தில் கொடபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று (03) மாலை 4 மணி வரை இந்த அபாய அறிவிப்பு செல்லுபடியாகும்