கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்
Spread the love

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்

இலங்கை அரச கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநா செல்லும் தமிழர்கள்.தமிழின கொலையாளிகளை தண்டிக்க நீதி வேண்டி ஒன்று கூடிய தமிழ் காட்சிகள் பாரிய நகர்வு .

சிறுபான்மை தமிழர்கள் ,இலங்கையில் இறுதி முள்ளி வாய்க்கால் போரின் பொழுது கொத்து கொத்தாக கொன்று குவிக்க பட்டனர் .

அவ்வாறு கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் படுகொலைக்கு, நீதி வேண்டி தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவையின் கதவுகளை தட்டுகின்றன .

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில்தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்று கூடும் , வீச்சின் தாக்கம் கண்டு இலங்கை அரச பயங்கரவாதம் அலறுகிறது .

இறுதி போர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை

பிரிந்து கிடந்த தமிழ் காட்சிகள் பலதும் ஒன்றிணைந்து ஒருமித்து ,கட்சி ,அமைப்பு பேதம் இன்றி ஒன்று கூடி நீதி வேண்டி தேர் இழுக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்ட தொடர் ஆரம்பிக்க பட உள்ள இவ்வேளையில் ,புலம் பெயர் அமைப்புக்களும் ,இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல் காட்சிகள் இணைந்து இந்த நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்

தமிழருக்கு தீர்வு என்ற ஒற்றை கோட்டில் நின்று ஒருமித்து பயணிக்கும் இந்த செயல் பாடுகள் உலக தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

புலமை வாய்ந்த பலர் ஒன்றிணைந்து அழுத மக்களின் அவலம் துடைத்து ,தமிழர் உலக பந்தில் எழுந்து நடக்க இந்த தேர் இழுக்க படுகிறது .

இன அழிப்பில் இலங்கை தண்டிக்கப்படுமா ..?

சிங்கள பேரினவாத அரசு புரிந்த தமிழ் இனப்படுகொலைக்கு ,இலங்கை அரச பயங்கரவாத இராணுவம் ,அதனை நிகழ்த்திய அரசுகள் தண்டிக்க படுமா என்கின்ற கேள்வி இங்கே பிரதானமாக எழுப்ப பட்டுள்ளது .

தமிழின படுகொலை இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிகின்ற பொழுதும் ,இதுவரை தமிழருக்கு உலக பந்தில் நீதி கிடைக்கப்படவில்லை .

கொலைகளை புரிந்தவர்கள் உல்லாசமாக உலவி திரிகின்றார்கள் .அழுத மக்கள் மட்டும் அழுகையோடு பயணிக்கின்றனர் .

இவ்வாறான நிலையில் மாறி வரும் உலக அரசியல் ஒழுங்கின் கீழ் ,புதிய பூகோள அரசியலின் மாறுதலில் ,பாதிக்க பட்ட தமிழருக்கு தீர்வு கிடைக்க பெறுமா என்ற கேள்வியே இங்கே எழுகிறது .

அந்த சந்தேக ஏக்க கேள்விகளுடன் முடிந்தவரை முட்டி பார்ப்போம் என, ஐநாவின் வாசல்களை உரக்க தட்டுகின்றன .

பலமாக அணிசேர்ந்த கட்சிகள்,அமைப்புகள் ஒன்றிணைந்து இழுக்கும் நீதிக்கான இந்த போர் வெற்றி பெறுமா ..?

சூம் மீட்டிங்கில் ஒன்றுகூடிய ஆளுமைகள் ,அரசியல் தலைவர்கள் ,மக்கள் நலன் விரும்பிகள் ,யாவருக்கும் எதிரி இனையம் மகத்தான பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்து கொள்கிறது .

ஒன்று படுவோம் வென்று நிமிர்வோம் -நாம் தமிழர் –

-வன்னி மைந்தன் –