திடீரென தோன்றிய சிவலிங்கம்
Posted in இலங்கை செய்திகள்

திடீரென தோன்றிய சிவலிங்கம்

திடீரென தோன்றிய சிவலிங்கம்

திடீரென யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது.

குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது.

குறித்த சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் குறித்த சிவலிங்கத்தை அதே இடத்தில் வைத்து வழிபடுவதற்கு சைவ மக்கள் எற்பாடு செய்து வருவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவலிங்கம் காணப்படும் இடத்யிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கடற்படை முகாம் ஒன்றும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

மலையகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை photo

இன்றைய சிவராத்திரி (11) தினத்தில் மலையகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை

இன்றைய சிவராத்திரி (11) தினத்தில்

வெற்றிலையூர் (புலத்கோபிட்டிய) எதுராபொல தோட்டம் 2 ஆம் பிரிவில் அமைந்திருக்கும் ஸ்ரீ பத்தினி அம்மன் தேவஸ்தான

வளாகத்தில் நேற்று (10) சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று (11) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

இந்த தெய்வீக நிகழ்வில் நாடயாவிய ரீதியில் பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள்

Home » You searched for சிவலிங்கம்
வேலணை பிரேதச சபையில் மாடு பிடித்த இலங்கை தமிழரசு கட்சி கள்ளர்
Posted in இலங்கை செய்திகள்

வேலணை பிரேதச சபையில் மாடு பிடித்த இலங்கை தமிழரசு கட்சி கள்ளர்

வேலணை பிரேதச சபையில் மாடு பிடித்த இலங்கை தமிழரசு கட்சிகள்ளர்

வேலணை பிரேதச சபையில் மாடு பிடித்த இலங்கை தமிழரசு கட்சி கள்ளர்,வேலணை பிரேதச சபையில் மாடு பிடித்த இலங்கை தமிழரசு கட்சி கள்ளர் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

தலைவர் பிரபாகரன் பெயரை வைத்து பிழைப்பு

உக்ரைனில் 200 000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ட்ரோன் தாக்குதல்கள் மின்சாரம் துண்டிப்பு
உக்ரைனில் 200 000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ட்ரோன் தாக்குதல்கள் மின்சாரம் துண்டிப்புஉக்ரைனில் 200 000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ட்ரோன் தாக்குதல்கள் மின்சாரம் துண்டிப்பு

தலைவர் பிரபாகரன் பெயரை வைத்து பிழைப்பு நடத்தி வரும் இலங்கை தமிழரசு கட்சி வெள்ளை வேட்டி கள்ளர் ,அப்பாவி மக்கள் வாழ்வாதாரத்துடன் விளையாடி வருகின்றனர் .

வேலணை பிரேசசபையில் பெண் வாழ்வாதாரத்தை மைய படுத்தி செயல் பட்ட பெண்ணின் மாட்டை

களவாக பிடித்து பணம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .

யாழ் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் ஆவார், அவர் இலங்கைத் தமிழரசு கட்சி அரசியல் கட்சியைச் சேர்ந்தவர், ஜூன்

2025-ல் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் அவர் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை தமிழரசு கட்சி

இலங்கை தமிழரசு கட்சியின் இந்த செயல்பாடுகள் மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை தமிழரசு கட்சி வெள்ளை வெட்டி கள்ளர்கள் ,தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

கோடி கோடியாக வருமானம் பெறும் இந்த பிரேதேச சபைகள் யாவரும் ,கொள்ளை அடித்து பெருத்து வாழ்கின்றனர் .

ஸ்ரீதரன் ,ரவிகரன் போன்றவர்களுக்கு தொலைபேசி மேற்கொண்டால் எமக்கு பதில் தர மறுத்து ஓடி வருகின்றனர் .

வன்னி மைந்தன் டிக் டாக்கில் இன்று சூடான விவாதம் ,இலங்கை நேரம் இரவு 10..00 மணிக்கு மக்களே கலந்து கொள்ளுங்கள்

இந்த அரசியல் கள்ள கூட்டங்களை மக்களே விரட்டி அடிக்க வேண்டும் ,பொறுப்பற்ற அரச நிர்வாகமும் ,மக்களை ஏமாற்றும் இவர்களை விரட்ட வேண்டும் .

CLICK HERE VIDEO

தொண்டமானில் முதுகில் குத்தியவா்கள் பலா்
Posted in இலங்கை செய்திகள்

தொண்டமானில் முதுகில் குத்தியவா்கள் பலா்

தொண்டமானில் முதுகில் குத்தியவா்கள் பலா்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பலமாக இருப்பதற்கு அமரர் முத்து சிவலிங்கமும் பிரதான தூணாக இருந்தார் என இலங்கை தொழிலாளர்

காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற முன்னாள் அமைச்சர் அமரர். முத்து சிவலிங்கத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மேலும் கருத்து தொிவித்த அமைச்சா், அமரர் முத்து சிவலிங்கம் பதவிகளுக்காக ஆசைப்பட்ட நபர் கிடையாது

. அவர் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும் மலையகம் எப்படி இருக்க வேண்டும் என்ற அவரின் சிந்தனைகளுக்கு நிச்சயம் நாம் உயிர்கொடுப்போம்.

முத்துசிவலிங்கம் ஐயா அமைதியான மனிதர். சேவை மனப்பான்மை கொண்டவர். தான் மட்டும் வளராமல் கட்சியில் உள்ள அனைவரையும் வளர்த்துவிட்ட மா மனிதர் ஆவார்.

தொண்டமானில் முதுகில் குத்தியவா்கள் பலா்

நான் சபரிமலைக்கு முதன் முறையாக மாலை அணிந்திருந்தவேளையிலேயே அவர் உயிரிழந்திருந்தார். மாலையை கழற்றி வைத்து விட்டாவது அஞ்சலி செலுத்த செல்வோமா என நினைத்தேன்.

ஆனால் முதன்முறை என்பதால் அதனை என்னால் செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனால் அந்த வலி இன்னும் என்னுள் இருந்துகொண்டு இருக்கின்றது.

50 வருடகாலத்துக்கு மேலாக மக்களுக்கும், கட்சிக்கும், தொழிற்சங்கத்துக்கும் சேவையாற்றிய அவருக்கு தகுந்த மரியாதை அளிக்கப்பட்டதா என்ற வினாவுக்கான விடை கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

அதுவும் எனக்கு வேதனையை தந்தது. ஒருவர் நம்முடன் இருக்கும்போது அவரின் முக்கியம் தெரியாது.

இல்லாமல்போனால்தான் அதன் வலி புரியும். முத்துசிவலிங்கம் போன்ற அரசியல் தலைவரை பார்க்க முடியாது. அவர்போல் ஒரு தலைவரை உருவாக்கவும் முடியாது.

தொண்டமானில் முதுகில் குத்தியவா்கள் பலா்

குரலை உயர்த்தி பேசுவது தலைமைத்துவம் கிடையாது. நாம் பேசும்போது மற்றயவர்களின் குரல்களை அடங்க வைப்பதுதான் தலைமைத்துவம். அப்படிபட்ட ஒரு தலைவர்தான் முத்துசிவலிங்கம்.

கட்சிக்காக விசுவாசமாக இருந்தார். மலையகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கினால். மக்கள் அன்பால் அவருக்கு மின்சார கண்ணா என்றுகூட பெயர் வந்தது.

ஆறுமுகன் தொண்டமானுக்கு தூணாக இருந்தார். முதுகில் குத்துவிட்டு பலர் வெளியேறினாலும் பக்க பலமாக இருந்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸை கட்டியெழுப்புவதற்கு பக்க பலமாக இருந்தார். கட்சியில் சமரச தூதுவராக செயற்பட்டார் என்றார்.

No posts found.
கோட்டா மீது குண்டுத்தாக்குதல்: LTTE பொறியியலாளர் விடுவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கோட்டா மீது குண்டுத்தாக்குதல்: LTTE பொறியியலாளர் விடுவிப்பு

கோட்டா மீது குண்டுத்தாக்குதல்: LTTE பொறியியலாளர் விடுவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில், கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் வைத்து தற்கொலைத்தாக்குதல் நடத்தி, அவரை படுகொலைச் செய்வதற்கு சூழ்சிகளை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 17 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் பொறியியலாளரான சிவலிங்கம் ஆரூரன் என்பவரே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, என்பவரால், நேற்று (16) விடுவிக்கப்பட்டார்.

கோட்டா மீது குண்டுத்தாக்குதல்: LTTE பொறியியலாளர் விடுவிப்பு

இந்த பொறியியலாளர் உதவி பொலிஸ் அதிகாரி சிசில் டி சில்வாவிடம் வாக்குமூலம் அளித்ததை தவிர எந்தவொரு சாட்சியமும் அவருக்கு எதிராக முன்வைக்கப்படவில்லை.

இதுதொடர்பில் முறைபாட்டாளர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிஸிட்ட ஜெனரல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததை கவனத்தில் கொண்டு, சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் பொறியியலாளரான சிவலிங்கம் ஆரூரன் விடுவிக்கப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ, பயணித்த வாகன தொடரணியின் மீது கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் வைத்து, 2006 டிசெம்பர் 1ஆம் திகதி காலை 1.30 மணியளவில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டு 14 பேர் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்களில் சாதாரண பொதுமக்கள் ஏழு பேரும் அடங்கியிருந்தனர்.

திகாம்பரம் ஜீவனின் சொத்துக்கள் எவ்வளவு
Posted in இலங்கை செய்திகள்

திகாம்பரம் ஜீவனின் சொத்துக்கள் எவ்வளவு

திகாம்பரம் ஜீவனின் சொத்துக்கள் எவ்வளவு

நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், , இராதாகிருஷ்ணன் ஜீவன் தொண்டமான் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்புத் ​தெரிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பம் ஒன்றுக்கு, நுவரெலியா மாவட்ட ​உதவித் தேர்தல் ஆணையாளர்

கே.ஏ.எல்.எஸ்.கலுகம்பிடிய கையெழுத்திட்டு 25.10.2022 என திகதி குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்ட பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், வே.இராதாகிருஸ்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற

உறுப்பினர்களான அமரர்களான ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம் ஆகியோரது சொத்து விவரங்கள், கல்வி தகமைகள் உள்ளிட்டத் தகவல்களை

வழங்கக் கோரி 02.10.2022 அன்று நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டது.

வழங்கப்பட்ட பதில் கடிதத்தில், அமரர் ஆறுமுகன் தொண்டமான் 1994, 2001, 2004, 2010, 2015ஆம் ஆண்டுகளில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். முத்துசிவலிங்கம் 1994, 2001, 2004, 2010, 2015 ஆம் ஆண்டுகளில்

பொதுத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார். பழனி திகாம்பரம் 2004, 2010, 2015, 2020ஆம் ஆண்டுகளிலும், வே.இராதாகிருஷ்ணன் 1999, 2004, 2009, 2015, 2020ஆம் ஆண்டுகளிலும், மயில்வாகனம் திலகராஜ் 2015ஆம் ஆண்டும், ஜீவன் தொண்டமான் 2020ஆம் ஆண்டும் பொதுத்தேர்தலில் போட்டியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திகாம்பரம் ஜீவனின் சொத்துக்கள் எவ்வளவு

அரசியல்வாதிகளின் கல்வித் தகவல்கள் வேட்புமனுக்களில் சேர்க்கப்படாததால் ”தேர்தல் ​ஆணையகத்திடம் அரசியல்வாதிகளின் கல்வி தகவல்கள் இல்லை” எனவும் பதில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் “RTI விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள “சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்” தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் அனுமதியுடனேயே வழங்கப்பட வேண்டும்.

எனவே சொத்துகள் மற்றும் பொறுப்புகளை வழங்குவதற்கு அவர்களின் அனுமதி எதிர்காலத்தில் கோரப்பட்டு, அனுமதி கிடைத்தால் மாத்திரமே அந்தத் தகவல்கள் வழங்கப்படும்” எனவும் ​தெரிவிக்கப்பட்டிருந்தது.

தவலறியும் உரிமைச் சட்டத்தின் 3(1) 5ஆம் பிரிவின்படி இலங்கை பிரஜைகள் ஒவ்வொருவரும் ஒரு பகிரங்க அதிகாரசபையின் உடமையில், கட்டுப்பாட்டில், உள்ள தவல்களை பெற்றுக்கொள்வதற்கான உரிமை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, உதவித் தேர்தல் ஆணையாளர் கே.ஏ.எல்.எஸ்.கலுகம்பிடிய வழங்கிய தவல்களில் திருப்தி இல்லை என்பதால் இது தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேன்முறையீட்டுக்கு 14.11.2022 என திகதி குறிப்பிடப்பட்டு சிங்கள மொழியில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், “நீங்கள் கோரியிருக்கும்

சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை சம்மந்தப்பட்ட நபர்களின் அனுமதியுடனேயே வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களின் அனுமதி கோரப்பட்டது.

இதன்படி, சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை வழங்க சம்மந்தப்பட்டவர்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். எனவே, சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை வழங்க முடியாது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமையவே தகவல்களை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்க

முடியும். ஆனால் இதனை எதனையும் குறிப்பிடாமல் தகவல்களை வழங்குவதற்கு நுவரெலியா மாவட்ட தேர்தல் ஆலுவலகம் மறுத்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், எம்.கே சமன் ஶ்ரீ ரத்நாயக்கவுக்கு 28.11.2022 அன்று மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள​போதிலும் இதுவரையில்
பதில் கிடைக்கவில்லை என்பதால் தகவலறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No posts found.
பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம் லண்டன் எக்ஸல்
Posted in இலங்கை செய்திகள்

பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம் லண்டன் எக்ஸல்

பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம் லண்டன் எக்ஸல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு கார்த்திகை 27,

விடுதலைக்காய் களமாடி விதையான மாவீரர்களை வணங்கி உறுதி எடுக்கும் நாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள். வழமை போன்று பிரித்தானியாவில் தமிழர்

ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் 2022 ஆம் ஆண்டிற்க்கான தமிழீழ தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சி பூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்படுகின்றது.

நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை தமிழீழத்தேசிய செயற்பாட்டில் 1982 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவரும் பிரித்தானிய தமிழீழ

ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளராகவும் இருக்கும் திரு.சின்னவன் சிவலிங்கம் அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார்.

பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம் லண்டன் எக்ஸல்

பிரித்தானிய தேசியக் கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி பாற்பரா ராஜன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

தமிழீழ தேசியக் கொடியினை ராமச்சந்திரன் விஜயகுமார் எனும் இயற் பெயர் கொண்ட 1992 ஆம் ஆண்டு தாயக விடுதலை போரில் தன்னை இணைத்து

மணலாறு மாவட்ட தளபதியாகவும், காவல் துறை ஆணையக பொறுப்பாளராகவும், திருகோணமலை மாவட்டத்துணைப்படை பொறுப்பாளராகவும் பல பொறுப்புகளை வகித்து இறுதி வரைகளத்தில் நின்ற திரு.தமிழவன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.


தொடர்ந்து ஈகை சுடர் ஏற்றும் நேரத்திற்க்காக காத்திருங்கள்.

நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.
Posted in இலங்கை செய்திகள்

நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.

நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் கடமையாற்றி வந்த சில மாகாண திணைக்களத் தலைவர்களை வேறு திணைக்களங்களுக்கு

இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்கவிற்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளராக கடமையாற்றிய திருமதி. ஆர்.வளர்மதி மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும், மாகாண கல்வித்

திணைக்களத்தின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய என்.சிவலிங்கம் மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.

மாகாண கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய ஏ.எல்.எம்.அஸ்மி கல்முனை மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண கலாசார பணிப்பாளராக கடமையாற்றிய எஸ்.நவநீதன் மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளராக பணியாற்றிய (திருமதி) எஸ்.சரணியா மாகாண கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளராகவும், மாகாண கூட்டுறவுச்

சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக பணியாற்றிய ஏ.ஜி.தேவேந்திரன் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளராக கடமையாற்றிய கே.இளந்துடுதன் மாகாண கூட்டுறவு சேவைகள்

ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த இடமாற்றங்களைப் பெற்ற அதிகாரிகள் இன்று (02) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்து விசேட

கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இக்கலந்துரையாடலின்போது இடமாற்றங்களைப் பெற்றவர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இடமாற்றங்களைப் பெற்ற சகல அதிகாரிகளும் தங்களுக்கான கடமைகளை உடனடியாக பொறுப்பேற்றுக்கொள்ளுமாறும்,


அதில் எந்த மாற்றங்களும் இடம்பெறாது என்று கிழக்கு மாகாண ஆளுநர் சகல அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளார்.

பைஷல் இஸ்மாயில் –

    Posted in உலக செய்திகள்

    பிரிட்டன் பாரளுமன்றம் முன்பாக முள்ளிவாய்க்கால் நிகழ்வு – photo

    முள்ளிவாய்க்கால் 13 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனியத் தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிவரை


    கவனயீர்ப்புப் போராட்டமும் அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலின் 13 ம் ஆண்டு நிகழ்வின் தொடர்ச்சியாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து நிகழ்வை முன்னெடுத்தனர். தமிழர்

    ஒருங்கிணைப்புக் குழு ஒழுங்கமைப்பில் பிற்பகல் 2:30 மணியளவில் ஒல்ட் பிலேஷ் யாட் ல் இருந்து நீதிக்கானபேரணி ஆரம்பமாகி இல 10 டவுணிங் சாலைக்கு முன்பாக வந்தடைந்தது.


    பிற்பகல் 3 மணியளவில் நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. பொதுசுடரினை மூத்தசெயற்பாட்டாளர் திரு. சிவலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.


    பிரித்தானியத் தேசிய கொடியினை தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி. பவித்திரா உதயகுமாரும்


    தமிழீழத் தேசிய கொடியினை 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிவரை பயணித்த தேசியச்செயற்பாட்டாளர் திரு.தர்சன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.


    அகவணக்கத்தினை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்து வைக்கப்பட்டுருந்த நினைப்படத்திற்கான மலர்வணக்கம், சுடர்வணக்கம் பொதுமக்களால் செலுத்தப்பட்டது.


    தமிழர் இளையோர் அமைப்பு சார்பில் பவித்திரா உதயகுமார் உரை ஆற்றினார்.
    முள்ளிவாய்க்கால் நெருப்பு நினைவுகள் என்னும் தலைப்பில் நடனம் மற்றும் கவி அரங்கம் இடம்பெற்றது.


    தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெற்றது.
    இறுதியாக தேசியக்கொடிகள் கையேந்தப்பட்டு தமிழீழம் எனும் இலக்கை அடையும்வரை தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதியோடு நிகழ்வு நிறைவு பெற்றது .
    இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கப்பட்டது.

    Posted in சினிமா

    திரிஷாவையும், மணிரத்னத்தையும் கைது செய்யக்கோரி போலீசில் புகார்

    திரிஷாவையும், மணிரத்னத்தையும் கைது செய்யக்கோரி போலீசில் புகார்

    ஹரிகேஷ்வர் போலீஸ் நிலையத்தில் நடிகை திரிஷா மற்றும் இயக்குனர் மணிரத்னம் மீது இந்து அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன.

    திரிஷாவையும், மணிரத்னத்தையும் கைது செய்யக்கோரி போலீசில் புகார்
    திரிஷா, மணிரத்னம்
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

    கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இந்த படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இப்படம் 2 பாகங்களாக

    தயாராகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மத்தியபிரதேச மாநிலம் ஹரிகேஷ்வரில் நடைபெற்று வருகிறது.

    அங்குள்ள ராணி அகில்யாபாய் கோட்டை, அரண்மனை மற்றும் அவரால் அமைக்கப்பட்ட சிவன் கோவில்களில், கடந்த 5 நாட்களாக படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு நடிகர்கள் கார்த்தி, ரகுமானுடன் நடிகை திரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

    ஹரிகேஷ்வரில் நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைந்துள்ளன. கடந்த 1767-ம் ஆண்டு இந்த பகுதியை ஆண்ட ராணி அகில்யாபாயால் அமைக்கப்பட்ட

    சிவலிங்கங்கள் மற்றும் நந்தி ஆகியவை இந்துக்களால் புனிதமாக கருதப்படுகிறது. நேற்று அக்கரை பகுதியில் நடிகை திரிஷா ஒரு படகில் வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

    கரையில் வந்து இறங்கிய நடிகை திரிஷா கரையில் இருந்த ஒரு நந்தி மற்றும் சிவலிங்கத்துக்கு இடையே நடந்து வரும் காட்சியும் படமாக்கப்பட்டது. அப்போது நடிகை திரிஷா சிவலிங்கம், நந்தி சிலைகளுக்கு இடையே காலணியுடன் நடந்து வந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    நடிகை திரிஷா காலணியுடன் நடந்து வந்ததால் அந்த சிவலிங்கம் அவமதிக்கப்பட்டதாகவும், இதற்காக நடிகை திரிஷாவையும், இயக்குனர் மணிரத்னத்தையும் கைது செய்ய வேண்டும்

    என்றும் ஹரிகேஷ்வர் பகுதியை சேர்ந்த இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. இது தொடர்பாக ஹரிகேஷ்வர் போலீஸ் நிலையத்தில் இந்து அமைப்புகள் புகாரும் தெரிவித்துள்ளன.

    இந்த பகுதியில் ஏற்கனவே சல்மான்கான் நடித்த ‘தபாங்-3’ படப்பிடிப்பின் போதும் சிவலிங்கத்தின் மேற்புறம் பலகை அமைத்து, அதில் காலணிகளுடன் நடந்ததாக புகார் எழுந்தது. அதன்பிறகு

    ‘யமுனா பக்லா தீவானா’ படத்தின் படப்பிடிப்பின் போதும் சர்ச்சை எழுந்தது. அதன்பிறகு தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

      Posted in Uncategorized

      வாலிபனை தாக்கிய இராணுவம் – தொடரும் இராணுவ வன்முறைகள்

      இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

      சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று (07) இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

      உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞரே இவ்வாறு சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

      வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் தன்னை வழிமறித்துத் தாக்கியதாக இளைஞர் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார்.

      சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். .

      Home » You searched for சிவலிங்கம்
      Posted in இலங்கை செய்திகள்

      இறம்பொடை நகரத்தில் சிவன் ஆலயம் மலையக சின்னத்தை பாதுகாப்போம்.photo

      நுவரெலியா மாவட்டம் இறம்பொடை நகரத்தில் காணப்படும் மிகவும்

      பழமையான ஆலயத்தை ஊர் மக்களுடன் இணைந்து புணர் நிர்மானம்

      செய்து சிவலிங்கம் உட்பட் பிள்ளையார் அம்மன் முருகன் நவக்கிரக சிலைகள்

      ஆகம விதிபடி பிரதிஷ்டை செய்து ஆலயத்தை மீள் கட்யெழுப்பு நடவடிக்கைகள்

      முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நுவரெலியா கண்டி பிரதான பாதை

      அபிவிருத்தி காரணமாக இந்த ஆலய அபிவிருத்தி தாம நிலையில் காணப்படுகின்மை குறிப்பிடதக்கது.

      சுற்றுலா தளமாக விளங்கும் இறம்பொடை நகரத்தில் இவ்வாறான ஆலயம்

      ஒன்று அமையப்பெருவது காலத்தில் கட்டாயமாகும். இது நகரத்தையும் எமது மலையக மக்களின் காப்பக சின்னமாகவும் அமையும். இதனையே இந்த ஊர் பக்தர்களும் விரும்புகின்றனர்.

      இந்த தெய்வீக செயற்பாட்டிற்கு பணமாகவோ பொருட்களாகவே உதவி

      செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் ஆலய நிர்வாகத்தினரை. நன்றி

      ஓம் நமசிவாய