6 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய பிஎம்டபிள்யூ நிறுவனம் முடிவு – ஊழியர்கள் அதிர்ச்சி

Spread the love

6 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய பிஎம்டபிள்யூ நிறுவனம் முடிவு – ஊழியர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரசால் விற்பனை சரிந்து வரும் நிலையில் பிரபல பிஎம்டபிள்யூ சொகுசு கார் நிறுவனம் தனது ஊழியர்களில் 6 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

6 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய பிஎம்டபிள்யூ நிறுவனம் முடிவு – ஊழியர்கள் அதிர்ச்சி
கோப்பு படம்

உலகின் மிகவும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் பிஎம்டபிள்யூ-வும் ஒன்று. ஜெர்மனி நாட்டை தலைமையிடமாக

கொண்டு செயல்படும் இந்த கார் நிறுவனத்தின் கிளைகள் உலகின் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ளது.

பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தில் மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வாகனத்துறையில் விற்பனை இல்லாததால் பெரும் நஷ்டத்தை
சந்தித்து வருகிறது. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வருகிறது.

இந்நிலையில், கொரோனா காரணமாக போதிய விற்பனை இல்லாத காரணத்தால் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஊழியர்களில்

6 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த வேலை நீக்கம் இந்த ஆண்டு இறுதிக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், தானியங்கி காரை

உருவாக்குவதில் மேற்கொள்ளப்பட்ட வரும் ஆராய்ச்சிகளையும் தற்காலிகமாக
நிறுத்திவைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

6 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளதால் பிஎம்டபிள்யூ ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

      Leave a Reply