300 மில்லின் ரூபா செலவில் மலையகத்தின் 09 பெருந்தோட்ட பாடசாலைகளை இந்திய உதவி

Spread the love

300 மில்லின் ரூபா செலவில் மலையகத்தின் 09 பெருந்தோட்ட பாடசாலைகளை இந்திய உதவி

வே.இராதாகிருஸ்ணன் நடவடிக்கை

மலையத்தில் காணப்படும் 09 பெருந்தோட்ட பாடசாலைகளை இந்திய உதவி 300 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கு தற்போதைய

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வேலையில் இந்திய அரசாங்கத்துடன்

பேச்சுவார்த்தை நாடாத்தி அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்ததற்கு இனங்க அதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது. தொடர்ந்து இந்த

செயற்திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு நாளைய தினம் 20.02.2020 மாலை கல்வி அமைச்சின் செயலாளருக்கும் இந்திய அரசிற்கும் இடையிலான புரிந்துணர்வு கைசாத்து

உடன்படிக்கை கொழும்பு இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் நடைபெற உள்ளது.
இதன் படி நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை

விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயம் ஹட்டன் ஹெல்பொட தமிழ் வித்தியாலயம் டெம்பெஸ்டோர் தமிழ் வித்தியாலயம் நுவரெலியா வெஸ்டடோ தமிழ் வித்தியாலயம் கண்டி

மாவட்டத்தில் குண்டசாலை விவேகானந்த தமிழ் வித்தியாலயம் கண்டி விவேகானந்த தமிழ் வித்தியாலயம் பதுளை மாவட்டத்தில் நீவ்பேர்க் தமிழ் வித்தியாலயம் காலி

மாவட்டத்தில் தலங்கம சரஸ்வதி தமிழ் வித்தியாலயம் கேகாலை மாவட்டத்தில் ருவான்வெல ஸ்ரீ கலைவானி தமிழ் வித்தியாலயம் அடங்களாக 09 பாடசாலைகள் அபிவிருத்தி

செய்யபடவுள்ளன. இந்த அபிவிருத்தியில் பாடசாலையின் கட்டடம் உட்பட் உட்கட்மைப்பு வசதிகள் தளபாடங்கள் அனைத்தும் பெற்றுக் கொடுக்கப்படும். தலா ஒரு

பாடசாலைக்கு 30 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திகள் முன்னெடுக்கபடவுள்ளன


இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள்

முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்ணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்


உன்மையிலேயே இது ஒரு சந்தோஷமான விடயமாகும். நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த பொழுது இதனை பெற்றுக் கொள்வதற்காக இந்திய அரசுடன் பல

சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தினேன். அதன் பயனாக இந்த பெறுபேறு கிடைத்துள்ளது. இதற்கு உதவி செய்த கல்வி அமைச்சின் முன்னால் செயலாளர் முன்னால் கல்வி

அமைச்சர் உட்பட அனைத்து பனிப்பாளர்களும் அதிகாரிகளுக்கும் உத்தியோகஸ்த்தர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதே போல்

தொடர்ந்து இந்த வேலைத்திட்டத்தை தற்போதும் முன்னெடுத்து வரும் தற்போதைய கல்வி அமைச்சின் செயலாளர்; கல்வி அமைச்சர் உட்பட அனைத்து

பனிப்பாளர்களும் அதிகாரிகளுக்கும் உத்தியோகஸ்த்தர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். எமது நாட்டைவிட்டு

விடைபெற்று சென்ற முன்னால் இந்திய உயர் ஸ்தானிகர் சரன்ஜித் சிங் அவர்களுக்கும் தற்போதைய இந்திய உயர்

ஸ்தானிகர் அவர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்தக் கொள்கின்றேன் என்று கூறினார்.

300 மில்லின் ரூபா செலவில்
https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA

Leave a Reply